'மாவீரன் கிட்டு' படக்கதையை ஒரே வரியில் சொன்ன சுசீந்திரன்

வெண்ணிலா கபடி குழு", "நான் மகான் அல்ல", "அழகர் சாமி குதிரை", "பாண்டியநாடு", "ஜீவா", "பாயும் புலி" ஆகிய படங்களைத் தந்த சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணுவிஷால் நடிக்கவிருக்கும் படத்திற்கு “மாவீரன் கிட்டு” என்று பெயரிட்டுள்ளது படக்குழு.

இப்படத்தில் விஷ்ணுவிஷாலுடன் பார்த்திபன் முக்கிய கதாப்  பாத்திரத்தில் நடிக்கிறார்.  நாயகியாக ஸ்ரீதிவ்யா மற்றும் காமெடிக்காக சூரி என்று நட்சத்திர பட்டாளம் களம் இறங்குகிறது.

இப்படத்திற்கான படப்பிடிப்பு இன்று(வெள்ளி) பழநியில் ஆரம்பமாகிறது. இன்றிலிருந்து 50 நாட்கள் தொடர்ச்சியாகப் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்கள். 'மாவீரன் கிட்டு'வுக்கு இசை டி.இமான்.

​’மாவீரன் கிட்டு’ இது ஈழ விடுதலை பற்றிய திரைப்படம் அல்ல. 1985 காலகட்டத்தில் நம் தமிழகத்தில் மக்களின் உரிமைக்காக போராடிய ஒரு வீரனைப் பற்றிய திரைப்படம் என்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் விஷ்ணுவிஷாலை இயக்குநர் சுசீந்திரன் அறிமுகப்படுத்தினார். பின்னர் ஜீவா படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இருவரும் கூட்டணி சேர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!