வெளியிடப்பட்ட நேரம்: 12:43 (15/07/2016)

கடைசி தொடர்பு:12:44 (15/07/2016)

இது பார்த்திபனின் 'கோடிட்ட இடங்களை நிரப்புக!'

பார்த்திபன் இயக்கத்தில் வெளியான “கதை திரைக்கதை வசனம் இயக்கம்” திரைப்படம் வசூல் ரீதியிலும் விமர்சனரீதியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், அகிலா கிஷோர், தம்பிராமையா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படத்தைத் தொடர்ந்து பார்த்திபன் பல படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரத்திலும், வில்லன் ரோலிலும் வந்து மிரட்டினார். இப்போது பார்த்திபன் இயக்கவிருக்கும் அடுத்தப் படம் ரெடி. அந்தப்  படத்தின் பெயர் “கோடிட்ட இடங்களை நிரப்புக”.

இதில்,  பார்த்திபன் மற்றும் தம்பிராமையா நடிக்கவிருப்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது. பார்த்திபன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். தவிர, நாயகன் மற்றும் நாயகி யாரென்பது இன்னும் உறுதியாகவில்லை. படத்திற்கு சத்யா இசையமைக்க, பன்னீர் செல்வம் ஒளிப்பதிவு செய்கிறார்.

கதையே இல்லாமல் ஒரு படத்தை இயக்கி, அந்த புது முயற்சியில் வெற்றியும் பெற்ற படமே “கதை திரைக்கதை வசனம் இயக்கம்”, இந்தப் படத்தில் சினிமா எப்படி எடுக்கவேண்டும் என்பதையே படமாக்கிவிட்டார். கோடிட்ட இடங்களை நிரப்புக படம், வேறு ஒரு வித்தியாசமான கதை களம்.

“கண்டிப்பாக அனைவரது மனதையும் கொள்ளை கொள்ளும்” என்கிறார் பார்த்திபன். 

சுசீந்திரன் இயக்கத்தில் மாவீரன் கிட்டு படத்திலும், அறிமுக இயக்குநர் சுதர்சன் இயக்கத்தில் ஒரு படமும் பார்த்திபன் நடிக்கவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்