விஜய் சேதுபதியுடன் இணைகிறார் பாண்டியராஜன்! | Vijay Sethupathi join hands with Pandiaraj

வெளியிடப்பட்ட நேரம்: 12:58 (15/07/2016)

கடைசி தொடர்பு:13:08 (15/07/2016)

விஜய் சேதுபதியுடன் இணைகிறார் பாண்டியராஜன்!

விஜய் சேதுபதி இரண்டு வருடங்களுக்கு ரொம்ப பிஸி... தொடர்ந்து பல படங்களுக்கு 'கமிட்' ஆகியிருக்கும் நிலையில்...  தற்போது கே.வி. ஆனந்த இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக  நடித்துவருகிறார். 
 
இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டின் நடிக்கிறார். இவர்களோடு முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் டி.ராஜேந்தரும் நடிக்கிறார்.
 
இதற்கான படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இப்போது, இந்தப்  படத்தில் நடிகர் மற்றும் இயக்குநர் பாண்டியராஜனும் இணைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுபா, கபிலன் இவர்களுடன் இணைந்து இயக்குநர் கே.வி. ஆனந்த் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்