கபாலி வெளியாக வாய்ப்புள்ள 225 இணைய தளங்களை முடக்க உயர் நீதி மன்றம் உத்தரவு!

இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து, வரும் ஜூலை 22ல் வெளியாகவிருக்கும் திரைப்படம் கபாலி. இப்படம் இணையதளங்களில் வெளியாவதைத் தடுக்ககோரி தயாரிப்பாளர் தாணு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், சட்டவிரோதமாக திரைப்படங்களை வெளியிடும் இணையதளங்களை முடக்க உத்தரவிட்டார். மேலும் அனுமதியின்றி இயங்கும் 225 இணைய தளங்களை முடக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த வழக்கு வெற்றி குறித்து கபாலி திரைப்படத்தின் தயாரிப்பாளர் தாணு அவர்களிடம் பேசியபோது, “இது கபாலிக்காக மட்டும் தொடுக்கப்பட்ட வழக்கல்ல. தமிழ் சினிமா உலகமே இந்தத்  தீர்ப்பால் தலை நிமிரும். ஒவ்வொரு தமிழ்த் திரைப்படத்தின் பிரதிகள், இணையதளத்தில் எப்போது வெளியாகுமோ என்று பதை பதைப்போடு இருக்கும் தயாரிப்பாளர்கள் இனி நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். சரியான தருணத்தில் நெறியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றி"  என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!