வெளியிடப்பட்ட நேரம்: 17:02 (20/07/2016)

கடைசி தொடர்பு:17:41 (20/07/2016)

விஜய் 60 படத்திற்கு - எம்.ஜி.ஆர். பட டைட்டிலா?

ரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உட்பட பலர் நடிக்கும் "விஜய் 60"  படத்திற்கான படப்பிடிப்பு மூன்று கட்டமாக நடந்துவருகிறது.  முதல் கட்டமாக பெரம்பூர் பின்னி மில்லில் பெரிய அளவில் செட் போட்டு தொடங்கியது  தற்பொழுது மூன்றாம் கட்ட படப்பிடிப்பை நெருங்கியிருக்கிறது.

“அதிகப்படியான பஞ்ச் வசனங்கள் படத்தில் எனக்கு வேண்டாம் என்றும் எதார்த்தமாக வாழ்க்கையில் நடக்கும் வசனங்களே போதும்” என்பது போலவும் இயக்குநர் பரதனிடம் விஜய் சொல்லியிருப்பதாகக் கேள்வி. அதற்கேற்பத்தான் விஜய்க்கான வசனங்களை இப்படத்தில் பரதன் எழுதியிருக்கிறாராம்.

அதுமட்டுமின்றி, கீர்த்தி சுரேஷின் நடிப்பும், முகபாவனையும், விஜய்யுடன் வரும் காட்சிகளும் இந்த படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும், இருவருக்குமான காட்சிகளின்  படப்பிடிப்பு சிறப்பாக வந்திருப்பதாகவும் இயக்குநர் பரதன் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் விஜய் 60 வது படத்திற்கான டைட்டில் என்ன என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. படக்குழுவினர் டைட்டில் பற்றியான தீவிர ஆலோசனையில் தற்பொழுது இருக்கின்றனர். விஜய் 60வது படத்திற்கு எம்.ஜி.ஆர் படத்தின் பெயரை வைக்கலாம் என்று பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தெரிகிறது. இதன்படி, எம்.ஜி.ஆர். நடித்து 1965ல் வெளியான “எங்க வீட்டு பிள்ளை” பட டைட்டிலையே, விஜய் 60க்கு வைக்கலாம் என்று பேசிவருகின்றனர்.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், எங்க வீட்டுப் பிள்ளை படத்தைத் தயாரித்த 'விஜயா புரொடக்‌ஷன்' நிறுவனம் தான் தற்பொழுது விஜய் 60வது படத்தையும் தயாரித்துவருகிறது.

படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கியது. இன்னும் ஓரிரு மாதங்களில் படப்பிடிப்பு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்