வெளியிடப்பட்ட நேரம்: 17:59 (20/07/2016)

கடைசி தொடர்பு:19:03 (20/07/2016)

விஸ்வரூபம் டிரெய்லர் ரெடி! ரிலீஸ் எப்போது?

மல்ஹாசன் இயக்கி, நடித்து, தயாரித்து 2013ல் வெளியான திரைப்படம் விஸ்வரூபம். பல சிக்கல்களுக்கு நடுவே போராட்டங்களைச் சந்தித்து இப்படம் வெளியானது. முதல் பாகத்தின் போதே இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பையும் முடித்துவிட்டார் கமல்ஹாசன். ஆனால் விஸ்வரூபம் 2ம் பாகம் இன்னும் வெளியாவில்லை.

இந்நிலையில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சுதீப், நித்யாமேனன் நடிக்கும் முடிஞ்சா இவன புடி படத்திற்கான இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது, “ முடிஞ்சா இவன புடி படத்திற்கான இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு கமலை அழைப்பதற்காக அவரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அந்த நேரத்தில் விஸ்வரூபம் 2ம் பாகத்திற்கான டிரெய்லரை எனக்குக் காண்பித்தார். ரொம்ப வித்தியாசமாக டிரெய்லர் உருவாகியிருக்கிறது. விஸ்வரூபம் 2ம் பாகத்திற்கான டிரெய்லர் ரெடி. விரைவில் படம் ரிலீஸாகும்” என்று கூறினார்.

'விஸ்வரூபம் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும்' என்று சினிமா வட்டாரத்தில் சொல்லப்பட்டுவந்த நிலையில், அப்படத்திற்கான டிரெய்லர் ரெடியாகிவிட்டது என்பதை கே.எஸ்.ரவிக்குமார் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த வருட இறுதிக்குள் படம் வெளியாகும் என்று தெரிகிறது.

சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் தனது அலுவலகத்தின் படிக்கட்டில் இருந்து கால் இடறி கீழே விழுந்ததால், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்பொழுது கமல் ஓய்வு எடுத்துவருவதால், சபாஷ் நாயுடு படத்திற்கான படப்பிடிப்பை, வரும் செப்டம்பர் மாதம் வரையிலும் படக்குழு தள்ளிவைத்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்