⁠⁠⁠ஆகஸ்ட் 12ல் தனுஷுடன் மோதும் விக்ரம் பிரபு! | Dhanush Vs Vikram Prabhu : Movies to Hit screens on Aug 12

வெளியிடப்பட்ட நேரம்: 12:09 (25/07/2016)

கடைசி தொடர்பு:14:50 (25/07/2016)

⁠⁠⁠ஆகஸ்ட் 12ல் தனுஷுடன் மோதும் விக்ரம் பிரபு!

தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் தொடரி மற்றும் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகிவரும் வாகா, இவ்விரு படங்களும்  ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாக தயாராகிவருகிறது.

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்திசுரேஷ் நடிக்கும் “தொடரி” படத்திற்கு இசை டி.இமான். இப்படத்தில் தனுஷ் ரயில் தொழிலாளியாக நடித்திருக்கிறார். முழுக்க முழுக்க ரயிலிலேயே இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக.. வாகா. ஜி.என்.குமாரவேலன் இயக்கத்தில் விக்ரம்பிரபு, ரன்யா நடித்திருக்கும் இப்படத்திற்கும் இசை இமான். கிஷோர், சினேகா நடிப்பில் ஹரிதாஸ் படத்தை இயக்கியவர் ஜி.என்.குமாரவேலன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படைவீரனுக்கும், காஷ்மீர் பெண்ணுக்குமான காதலே கதைக்களம்.

மேலே குறிப்பிட்ட இவ்விரு படங்களுமே ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாக தயாராகிவருகிறது. ஏனெனில் ஆகஸ்ட் 12ம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸானால் தொடர்ந்து ஆகஸ்ட் 15 சுதந்திரதினம் வரை, தொடர் விடுமுறை நாட்களைக் குறிவைத்து இவ்விரு படங்களும் ரிலீஸாகிறது. ஜூலையிலேயே ரிலீஸாகவிருந்த தனுஷின் தொடரி, கபாலி படத்தினால் தள்ளிச்சென்றதும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி, இந்த மாதம் கபாலியால் தள்ளிச்சென்ற பல படங்கள் அடுத்தமாதம் வெளியாகும் என்றும் நம்பப்படுகிறது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்