வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (25/07/2016)

கடைசி தொடர்பு:19:13 (25/07/2016)

சைக்கலாஜிக்கல் த்ரில்லராக சைத்தான்!

விஜய் ஆண்டனி நடிக்கும் படங்களின் தலைப்புகளே, அந்தப் படத்திற்கான மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தும். 'நான்', 'சலீம்',  ' இந்தியா பாகிஸ்தான்', பிச்சைக்காரன் ஆகிய படங்களின் வரிசையில் இவரது அடுத்த படம் ‘சைத்தான்’.

தமிழில் மட்டுமல்லாமல் 'டப்' செய்யப்பட்ட தெலுங்கிலும் வசூல் ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றது 'பிச்சைக்காரன்'. ஆகவே சைத்தான் படத்திற்கு வெகுவான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.  அறிமுக இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி சைத்தான் திரைப்படத்தை இயக்கிவருகிறார். தயாரிப்பு, நடிப்பதோடு, படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைக்கிறார். சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாகிவரும் இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.

படத்தில் விஜய் ஆண்டனி ஐடி ஊழியராக நடிக்கிறார். அவருடன் ஓய்.ஜி. மகேந்திரன், ஆடுகளம் முருகதாஸ், அருந்ததி, மீரா கிருஷ்ணன், சாருஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்துவருகின்றனர். 

முதலில் தமிழில் மட்டுமே இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர் படக்குழுவினர். ஆனால் பிச்சைக்காரன் திரைப்படம், தெலுங்கிலும் நல்ல வரவேற்பு பெற்றதையடுத்து இப்படத்திற்கான தெலுங்கு 'டப்' பணிகளையும் முடித்துவிட்டு ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் வெளியிட முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. செப்டம்பரில் சைத்தான் திரையில் மிரட்ட வரலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்