தன்ஷிகா மாதிரி, இன்னும் யார் யாரெல்லாம் ஆக்‌ஷனுக்கு ரெடி? #ஒரு முன்னோட்டம்

 

போலீஸ் அதிகாரியாகவோ அல்லது கேங்ஸ்டர் கதைகளில் மாஸ் சண்டைக்காட்சியிலோ நடிக்கவேண்டும் என்பதே என் ஆசை”

உங்களுடைய ட்ரீம் ரோல் என்னவென்று கேட்டால், அநேகமாக நடிகைகளின் பதில் இதுவாகத்தான் இருக்கும். இந்த மாதிரியான ஆக்‌ஷன் ப்ளாக் காட்சியில் 90களில் நடித்த விஜய்சாந்தி தான் இவர்களில் பலரின் ரோல் மாடல்.

சமீபத்திய தமிழ் சினிமாவில், நாயகிகள் ஆக்‌ஷன் காட்சிகளில் விளாசி எடுப்பது நடந்துகொண்டுதான் வருகிறது. சமீப வரலாற்றை எடுத்துக் கொண்டால் அஜித் நடித்த பில்லா படத்தில் நயன்தாராவில் தொடங்கி இன்று “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்தில் நிக்கி கல்ராணி, கபாலியில் தன்ஷிகா என்று ரசிகர்களையே இந்த அழகிய நாயகிகள் மிரட்டி அதிரடிக்கின்றனர்.  இனி வரவிருக்கும் படங்களில் இப்படி ஃபைட் செய்யும் ப்யூட்டிகள் யார் யார் என்று விசாரித்ததில் சிக்கியவை.

நயன்தாரா- இருமுகன்

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நித்யாமேனனுடன் நயன்ந்தாரா இப்படத்தில் நடித்திருக்கிறார். ஆரம்பம், பில்லா படங்களைப் போன்று இந்தப் படத்திலும் ஆக்‌ஷனில் பெடலெடுத்திருக்கிறாராம் நயன். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நயன்தாரா நடித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆக்‌ஷன் த்ரில்லரான இப்படத்தில் விக்ரம் போலீஸ் ரகசிய ஏஜெண்டாக நடித்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 2ம் தேதி இசை வெளியிடப்படுகிறது. நயன்தாராவின் ஆக்‌ஷன் காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டிருக்கிறது.

அக்‌ஷரா கவுடா - போகன்

லக்‌ஷ்மண் இயக்கத்தில் ஜெயம்ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிப்பில் உருவாகிவரும் படமே போகன். இப்படத்தில் ஆக்‌ஷன் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பவர் அக்‌ஷரா கவுடா. எங்கயோ பார்த்திருக்கோமே என்று யோசித்தபோது தான், விஜய்யின் துப்பாக்கியில் நடித்தவர் என்பது நினைவுக்கு வருகிறது. அதன்பிறகு அஜித்தின் “ஆரம்பம்” படத்திலும் நடித்தார். போகன் படத்தில் நச்சென ஒரு பாடலும் இவருக்கு இருக்கிறதாம்.

தன்ஷிகா - காத்தாடி


“உங்களின் வாழ்த்துதலால் என்னால் தூங்கமுடியவில்லை” என்று ட்விட் செய்திருக்கிறார் தன்ஷிகா. கபாலியில் ரஜினிக்கு அடுத்தபடியாக படத்தில் பாராட்டுப் பெற்றவர் தன்ஷிகா. ஹேர் ஸ்டைல் முதல் உடல் மொழிவரையிலும் நுணுக்கமான நடிப்பினால் ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்திருக்கும் தன்ஷிகாவிற்கு அடுத்து ரிலீஸாகப்போகும் படம் காத்தாடி. இப்படத்திற்காக சண்டைப் பயிற்சிகள் தனியாகல் கற்றுக்கொண்டாராம். யாரு அநியாயம் பண்ணாலும் இந்த நாயகி தட்டிக்கேட்பார். 

தமன்னா - பாகுபலி 2

ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா என்று பிரம்மாண்டமாக உருவாகி வசூலில் வேட்டையாடியது பாகுபலி. இப்படத்தின் ஆக்‌ஷன் நாயகி யாரென்றுப் பார்த்தால் ”பச்சைத்தீ நீயடா....” என்று அழகாக பாடவும் ஆடவும் செய்து, அதே நேரத்தில் சண்டைக் காட்சியிலும் மிரட்டிய க்யூட் போராளி தமன்னா தான். முதல் பாகத்தைவிட, இரண்டாம் பாகத்தில் தமன்னாவிற்கு சண்டைக்காட்சிகள் நிறைய இருக்கிறதாம். 

-நெருடன்-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!