வெளியிடப்பட்ட நேரம்: 16:06 (26/07/2016)

கடைசி தொடர்பு:18:29 (26/07/2016)

கபாலி சர்ச்சைகள்.. களமிறங்குவாரா தாணு?


 

’ கபாலி' பூஜை போட்டு படப்பிடிப்பு தொடங்கியபோது  அந்த இடம்பெறும் கலைஞர்கள் குறித்து முதன்முதலின் விகடனுக்கு பேட்டி அளித்தார் ரஞ்சித். அதில் கபாலியில் இடம்பெறும் நடிகர்கள் பற்றி அவர் சொன்னார். அவரது லிஸ்டில்,  'அட்டகத்தி', 'மெட்ராஸ்' படங்களில் பணியாற்றியவர்கள் பலர் இருந்தனர்.  கடந்த 40 ஆண்டுகளில் ரஜினியோடு பணியாற்றிய கலைஞர்கள் நாசரை தவிர வேறு எவரும் இடம்பெறவில்லை. அப்போதே ரஜினிக்கு நெருக்கமான கலைஞர்கள் மத்தியில் அதிருப்தி அலை வீசியது.

 அடுத்து வெளிவந்த 'கபாலி' டீஸர்  உலகளவில் பேசப்பட்டது. ஆடியோ விழாவை  சென்னை ஒய்எம்சிஏ  மைதானத்தில் நடத்த தயாரிப்பாளர் தாணு  ஏற்பாடு செய்தார். அமெரிக்காவில் இருந்த  ரஜினியை தொடர்பு கொண்டார். 'ஏற்கெனவே எதிர்பார்ப்பு அதிகமா இருக்கு... இப்போ ஆடியோ ஃபங்ஷன் நடத்தி ஓவர் ஹைப்பை உருவாக வேண்டாம்' என்று ரஜினி சொல்ல நிகழ்ச்சி திட்டம் கைவிடப்பட்டது.

‘கபாலி' படத்தை இணையத்தில் பதிவிறக்கம் செய்யக்கூடாது  என்று மாநில, மத்திய அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் எதிரொலியாக  'கபாலி' படத்தை பதிவிறக்கம் செய்யக்கூடாது என்று  200-க்கும் மேற்பட்ட வலைதளங்களுக்கு  உத்தரவு போட்டது, நீதிமன்றம்.

'கபாலி' ரிலீஸுக்கு தடைகேட்டு 'லிங்கா' விநியோகஸ்தர்கள் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு ரிலீஸுக்கு முதல்நாள் நீதிமன்றத்தில் வந்து தாணுவுக்கு நெருக்கடியைக் கொடுத்தது. 'எனக்கும், 'லிங்கா' தயாரிப்புக்கும் சம்மந்தமில்லை' என்று தனக்கு வந்த  நெருக்கடியை சாமர்த்தியமாக சமாளித்தார்.

அரிமா சங்கத்தில் நடந்த நிகழ்ச்சி  ஒன்றில் ' 'கபாலி' தோல்விப்படம்'  என்று புகழ்பெற்ற கவிஞர் வைரமுத்து சொல்ல... அம்புடுத்தேன்.  மீண்டும் பரபரப்பு நெருப்பு பற்றிக்கொண்டது. 'ஏற்கெனவே 'அட்டகாசம்' படத்தில் 'எவனாயிருந்தா எனக்கென்ன?' என்று அஜித்துக்கு எழுதிய பாடலால் விஜய்க்கு என்மீது கோபம். 'சச்சின்' படத்தில் விஜய்க்கு பாட்டு எழுதுகிறேன் என்று சொன்னார், அமையவில்லை. அடுத்து 'துப்பாக்கி'யிலும் சான்ஸ் கேட்டார் நடக்கவில்லை. அப்புறம் 'கபாலி' படத்தில் ரஜினிக்கு பாட்டெழுதும் வாய்ப்புக்காக காத்திருந்தார் அதுவும் நிறைவேறவில்லை அந்த கோபத்தில்தான்  அந்த கவிஞர் 'கபாலி'யை தோல்விப்படம் என்று வசைபாடுகிறார்' என்று  தயாரிப்பாளர்  தாணு புகார் பட்டியல் வாசிக்கிறார். இது குறித்து ப்ரஸ்மீட் வைத்து, பதில் சொல்லப் போவதாகவும் கேள்வி

இது போன்ற பல சர்ச்சைகளுக்கும், இணையத்தில் ஆரம்பித்த கபாலியைப் புறக்கணிப்போம் கோஷங்களுக்கும் நடுவே..,  கவிஞர் சொன்னது போல் 'கபாலி'  தோல்விப் படமா? என்று கேட்டால் கடந்த 22-ம்தேதி  ரிலீஸானது 22,23,24 என்று மூன்று நாட்களில் தமிழ்நாட்டில் 70-கோடி, ஆந்திராவில் 36-கோடி, கர்நாடகாவில் 20-கோடி, கேரளாவில் 15-கோடி, மும்பையில் 33-கோடி, ஓவர்ஸிஸ்ஸில் 90-கோடி என்று மொத்தம் 264-கோடி என்று தயாரிப்புத் தரப்பு வசூல் பட்டியலை வாசிக்கிறது.

- சத்யாபதி    

நீங்க எப்படி பீல் பண்றீங்க