Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாக்ஸிங் பயிற்சியில் சூர்யா! #க்விக்-செவன் #QuickSeven

சிம்புவின் அடுத்த படம் “அன்பானவன் அடங்காதவன் அசராதவன்”. அதற்கான முதல் கட்டப் படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்திருக்கிறது. அடுத்த கட்டப் படப்பிடிப்பிற்கு படக்குழு தயாராகிவருகிறதாம். சிம்பு ஜோடியாக ஸ்ரேயா நடித்துவருகிறார்.  சிம்பு ஷூட்டிங்கிற்கு சரிவர ஒத்துழைப்பதில்லை என கௌதம் மேனன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்கு குறித்த நேரத்தில் வருகை தந்து, படத்தை சொன்ன தேதிக்கு முடித்துக்கொடுப்பாரா என்பதை பார்க்கலாம்! #Vaalu!


தென்னிந்திய நடிகைகளிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா. தன் சம்பளத்தை இன்னும் அதிகமாக்கியிருப்பது பிற நடிகைகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தற்பொழுது விக்ரமுடன் இருமுகன், ஜீவாவுடன் திருநாள், கார்த்தியுடன் காஷ்மோரா என்று அடுத்தடுத்து படங்கள் ரிலீஸாகவிருப்பதால் தன்னுடைய சம்பளத்தை கூட்டியிருக்கிறாராம் நயன்தாரா. மூன்று கோடியிலிருந்த சம்பளத்தை, தற்பொழுது படத்திற்காக அணுகும் தயாரிப்பாளர்களிடம் நான்கு கோடியாக உயர்த்தி கேட்பதாகக் கூறப்படுகிறது. #NiceNayan


விருதுகளை மட்டுமின்றி ரசிகர்களின் உள்ளத்தையும் கவர்ந்த படம் “காக்காமுட்டை”. இப்படத்தை தொடர்ந்து இரண்டு படங்களை வெளியிடுவதற்காக தயார் நிலையில் இருக்கிறார் இயக்குநர் மணிகண்டன். விதார்த் நடிப்பில் “குற்றமே தண்டனை” மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் “ஆண்டவன் கட்டளை”. காக்காமுட்டை பாணியிலேயே குற்றமே தண்டனை உருவாகியிருக்கிறது. ஆனால் ‘ஆண்டவன் கட்டளை கமர்ஷியல் பேக்கேஜில் உருவான திரைப்படம். எனவே நேரடியாக திரையரங்கில் ரிலீஸ் மட்டுமே. எந்த சினிமா விருதுக்கும் அனுப்புவதாக இல்லை என்று குறிப்பிட்டுள்ளார் மணிகண்டன். விஜய்சேதுபதியுடன் ‘சண்டைகாரி’ ரித்திகாசிங் நடித்துவரும் இப்படத்திற்கான படப்பிடிப்பு முடிந்து, மற்ற பணிகள் நடந்து வருகின்றனவாம். #VijaySethupathiHappyAnnachi! 


“கபாலி’ படத்தில் ஓய்வில்லாமல் நடித்ததன் காரணத்தால் கொஞ்சம் உடம்பிற்கும், மனதிற்கும் ஓய்வு தேவைப்பட்டது. அதனால் இரண்டு மாதங்கள் அமெரிக்கா பயணம் சென்றேன், கபாலி வெற்றிக்கு அனைவருக்கும் நன்றி என்று இரண்டு பக்கத்திற்கு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.  ஆனால் கடிதத்தில் 2016க்கு பதில் ஆண்டு மட்டும் 2017 என்று தவறுதலாக எழுதப்பட்டுவிட்டது. அதை ட்விட்டரில் ரசிகர்கள் குறிப்பிட, தேதி மாற்றப்பட்ட கடிதம் மீண்டும் ரஜினி தரப்பில் வெளியிடப்பட்டது. #Magizhchi


கபாலியின் தெலுங்கு ஆடியோ வெளியீட்டு விழாவில் தனது அடுத்த படம் சூர்யாவுடன் என அறிவித்திருந்தார் இயக்குனர் ரஞ்சித். இறுதிசுற்று, பூலோகம் வெற்றியால் பாக்ஸிங் கதையை தேர்ந்தெடுத்துள்ளார் சூர்யா. இந்நிலையில் "சிங்கம் 3" படப்பிடிப்பு முடிந்தவுடன் ரஞ்சித்தின் படத்திற்காக பாக்ஸிங் கற்றுக்கொள்ள முடிவெடுத்துள்ளாராம். இப்படத்திற்கான கதை விவாதம் தற்பொழுது நடந்துவருகிறதாம். #Superji!


'சபாஷ் நாயுடு' படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஜூலை கடைசி வாரத்தில் தொடங்கப்படுவதாக இருந்தது. ஆனால், தற்போது படப்பிடிப்பு செப்டம்பருக்கு தள்ளிப்போய் இருக்கிறது. கமல் அவரது அலுவலக மாடிப்படியிலிருந்து கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயத்தின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு கமலை ஒரு மாத காலம் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். #GetWellKamal


‘எங்கேயும் எப்போதும்’ படத்திற்கு பிறகு ஜெய்-அஞ்சலி இணைந்து நடிக்கும் படம் ‘பலூன்’. காதல் கலந்த திகில் படமாக உருவாகிவருகிறது. இப்படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா என்பது தற்பொழுது உறுதியாகியிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காதல் மற்றும் திகில் கலந்த படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிகிறார். படத்தில் மெலடி தேவைப்பட்டதால் யுவன் சரியான சாய்ஸ் என்று டிக் செய்திருக்கிறார்கள். எங்கேயோ பார்த்த மயக்கம்....! #ComeBackYuvan

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement