’செல்வி’ நயன்தாரா! ; க்விக்-செவன் #QuickSeven | Quick Seven - Today Cinema News Updates 28-07-2016

வெளியிடப்பட்ட நேரம்: 17:54 (28/07/2016)

கடைசி தொடர்பு:19:38 (28/07/2016)

’செல்வி’ நயன்தாரா! ; க்விக்-செவன் #QuickSeven

டிப்பில் வெரைட்டி காட்டி நடிக்கும் ஹீரோவென்றால் அது தனுஷ். அவரின் பிறந்த தினம் இன்று. அவரது நடிப்பில் உருவாகி வரும் வடசென்னை, 40 ஆண்டுகள் அடங்கிய வரலாற்றுக் கதையாம்.  மத்திய சிறைச்சாலைக்கான பிரம்மாண்ட செட் போடப்பட்டு, படப்பிடிப்பு நடந்துவருகிறது. 1977ம் ஆண்டிலிருந்து கதை நகர்கிறதாம். அந்தக் காலத்திற்கான காட்சிகளை படக்குழு படமாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. அடுத்த வருட ஜூலையில்தான் முதல் பாகம் ரிலீஸாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. நாங்க வெய்ட் பண்றோம் தல. #HBDDhanush


பாபநாசம் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்த கெளதமி, மோகன்லாலுடன் நமது என்ற படத்தில் இணைந்து நடித்துவருகிறார். அந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஆக்ஸ்ட் 5 ல் ரிலீஸாகவிருக்கிறது. கமலுக்கு ஏற்பட்ட  விபத்து பற்றிப் பேசிய கெளதமி, “ ஓடி, ஆடி வேலை செய்துகொண்டிருந்தவருக்கு, ஒரே இடத்தில் இருப்பது கஷ்டமாக இருக்கிறது. நல்லபடியாக குணமாகிவருகிறார். கபாலிக்கு கமல் விமர்சனம் எழுதியதாக பரவிய செய்தி முற்றிலும் தவறானது. அடிபட்டு படுத்திருக்கும் கமல் எப்படி கபாலி படம் பார்த்திருக்கமுடியும்" என்று கூறியுள்ளார். #GetWellSoonKamal!


பேயும் பேய் சார்ந்த இடமுமாக நம்மை பயமுறுத்தி மிரட்டிய படம் காஞ்சூரிங். இப்படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கிய ஜேம்ஸ் வான் தயாரிப்பில், வரும் வெள்ளியன்று இந்தியாவில் ரிலீஸாகவிருக்கும் படம்தான் லைட்ஸ் அவுட். எல்லாவித பேய் படங்களையும் எடுத்துவிட்ட நிலையில் சிக்கியிருக்கும் புது கான்செப்ட் இது என்றே கூறலாம். 'வெளிச்சத்தில் தெரியாது, இருட்டில் மட்டும் மனிதர்களின் கண்ணுக்குத்தெரியும் வினோத பேய்'- இதுவே கதைக்களம். அமெரிக்காவில் வெளியாகி பயத்தோடு வரவேற்பையும் பெற்றிருக்கிறது.  5 மில்லியன் டாலர் செலவில், 81 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த இருட்டுப் பேய் படம், இதுவரை 36 மில்லியன் டாலர் வசூல் செய்து, சாதனை படைத்திருக்கிறது. கவலைவேண்டாம் பாஸ்... இங்க தமிழிலும் ரிலீஸாகிறது. #Mudiyala!


ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ராஜேஷ் இயக்கிவருவரும், கடவுள் இருக்கான் குமாரு படத்தின் 90% படப்பிடிப்பு ஓவர். ராஜேஷ் படத்துல சந்தானம் இல்லாமலா? ஆனால் இந்தப் படத்தில் பிரதான வேடத்தில் நடிக்காமல், கெளரவ வேடத்தில் மட்டும்தான் நடிக்கவிருக்கிறார். அவருக்கான படப்பிடிப்பை விரைவில் தொடங்க ராஜேஷ் திட்டமிட்டுவருகிறார். #OkOk


காத்திருக்க முடியாமல், பார்த்துவிடவேண்டும் என்று தீபிகா படுகோனே ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் ட்ரிபிள் எக்ஸ் ஸாண்டர் கேஜ். 'தீபிகா நடிக்கும் ஹாலிவுட் படம், வின் டீசல் நடிக்கும் அடுத்தப் படம்,  டிரிபிள் எக்ஸ் படத்தின் மூன்றாம் பாகம்'  என்ற மூன்று காரணங்களே இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை உலகளவில் ஏற்படுத்தியிருக்கிறது. வின் டீசல், தீபிகாவை தூக்கிக்கொண்டிருக்கும் படங்கள், தீபிகாவின் சண்டைக்காட்சிகள் மற்றும் மேக்கிங் வீடியோவாக இணையத்தில் வெளியாகி, வைரல் ஹிட். எப்போ படம்னுதான யோசிக்கிறீங்க...? அடுத்த வருடம் பொங்கலுக்கு இந்தியாவில் ரிலீஸ் பாஸ். #FightingAngel


இப்பொழுதெல்லாம், எந்த படமென்றாலும் தமிழில் உருவானால் தெலுங்கிலும், தெலுங்கு படங்கள் தமிழிலும் டப் செய்யப்பட்டு ஒரே நாளில் ரிலீஸ் செய்வது அதிகரித்துவருகிறது. இதே ஃபார்முலாவை வெங்கடேஷும் பின்தொடர ரெடியாகிவிட்டார். வெங்கடேஷ், நயன்தாரா நடிப்பில் உருவாகும் தெலுங்கு படம் பாபுபங்காரம். இப்படத்தை தமிழிலும் டப் செய்து, ஆகஸ்ட் 12 ம் தேதியன்று, இரு மொழிகளிலும் ஒரே நாளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறது படக்குழு. தமிழுக்கான வேலைகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றனவாம். தமிழில் இப்படத்திற்கு செல்வி என்று பெயரிட்டுள்ளனர். #WowNayan!


சிவகார்த்திகேயன் நடித்துவரும் ரெமோவை,  அக்டோபர் 7ம் தேதி ரிலீஸ் செய்வதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதே நாளில் ஜீவா, காஜல் நடிக்கும் கவலைவேண்டாம் படமும் வெளியாகவிருக்கிறது. இரண்டு படங்கள் மட்டுமே ரிலீஸ் என்றால், தியேட்டர்கள் சரிசமமாக பங்காகும் என்று நினைத்துக்கொண்டனர் இரு படக்குழுவினரும். ஆனால் அதே நாளில் விஷால் நடிக்கும் கத்திசண்டை, ஜெயம்ரவியின் போகன் படமும் ரிலீஸாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் தியேட்டர் எண்ணிக்கை குறையலாம், வசூலும் குறைய வாய்ப்பிருக்கிறது என்று ரெமோ படக்குழு தீவிர யோசனையில் இருக்கிறார்களாம். #Ethirneechal!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்