வெளியிடப்பட்ட நேரம்: 19:25 (29/07/2016)

கடைசி தொடர்பு:19:56 (29/07/2016)

மகேஷ்பாபு Vs எஸ்.ஜே.சூர்யா! #க்விக்-செவன் #QuickSeven

காதலும், காதலின் ஆழத்தையும் விழிச்சவால் கொண்ட இருவரை  வைத்து அழகாக சொல்லிச் சென்ற படம் குக்கூ. இப்படத்தின் மூலம் தமிழுக்கு கிடைத்த அறிமுக இயக்குநர் ராஜூமுருகன்.  அரசியல் பேசும் இவரது  அடுத்த படமான ‘ஜோக்கர்’ திரைப்படம் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகும் என்பதை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருக்கிறது. தேர்தலுக்கு முன்னரே வெளியாகவிருந்தது, சில காரணங்களால் தள்ளிச்சென்றதும் குறிப்பிடத்தக்கது. சாதாரண மனிதனின் அரசியல் கோபங்களே இந்த ஜோக்கர்! #WelcomeJoker


கபாலி படத்தின் முதல் ஆறு நாள் வசூல் மட்டும் 321 கோடி ரூபாய் என்ற தகவல் வெளியானதுமே ஒட்டுமொத்த இந்திய திரையுலகுமே அதிர்ச்சியில் உறைந்துவிட்டதாம். தமிழ் திரையுலகில் இதுவரையிலாத மிகப்பெரிய வசூல் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். சென்னையில் மட்டும் ஆறு நாளில் ஆறு கோடி வசூலாம். மல்லுவுட்டில் நடிகர் மோகன்லால் விநியோகஸ்த உரிமையை 8 கோடிக்கு கைப்பற்றி 10.5 கோடிக்கு வசூல் சாதனையை படைத்திருக்கிறாராம்.  கபாலிக்கு வரும் சர்ச்சை விமர்சனங்களே படத்தின் வெற்றியை அதிகரிப்பதாக படக்குழு சார்பில் தெரிவிக்கின்றனர். #AlwaysNo1


இசையால் ஆஸ்காரையே கட்டிப்போட்டவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவரின் இசை ஐ.நா. சபையின் அரங்கிலும் எதிரொலிக்கப்போகிறது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவின் 70வது சுதந்திர தினம் என்பதால், அதை ஐநா சபையில் கொண்டாட முடிவெடுத்திருக்கிறார்கள். அந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியும் அடக்கம். 193 நாடுகளிலிருந்தும் வரும் தலைவர்கள் முன்பு பாடப்போகிறார். இதற்கு முன்பு 1996ல் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசை நிகழ்ச்சி ஐ.நா. சபையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. #Jaigo


அதிகமாக சர்ச்சையில் சிக்கிய நடிகையென்றால் அது நயன்தாராவாகத்தான் இருக்கும். நடிப்பில் சிக்ஸர் விளாசும் இந்தப் க்யூட் குயின் சில விஷயங்களில் கறார் பேர்வழி. வெங்கடேஷூடன் பாபுபங்காரம் படத்தில் நடிக்கும்போது, நயன்தாராவின் கால்ஷீட் நாட்களை படக்குழுவினர் விரயம் செய்துவிட்டனராம். இறுதியில் ஒரு பாடல் மட்டும் மீதமாகிவிட, அந்த பாடல் ஷூட்டிங்கிற்காக நயன்தாராவிற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஆனால் நயன் செல்ல மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதனால் அப்பாடல் இன்றியே படம் ஆகஸ்ட் 12ல் ரிலீஸாகவிருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற இசைவெளியீடு, டிரெய்லர் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை நயன். #QueenNayan


“மின்வெட்டு நாளில் மின்சாரம்போலே வந்தாயே....” என்று தமிழ் திரையுலகிற்கு வந்து கலக்கொண்டிருந்த பிரியா ஆனந்த் மிஸ்ஸிங். விசாரித்ததில், அவர் மலையாள கரையோரம் ஒதுங்கிவிட்டதாக கூறுகின்றனர். ப்ரித்விராஜூக்கு ஜோடியாக எஸ்ரா என்ற படத்தில் நடித்துவருகிறார், அது மட்டுமின்றி ராஜகுமாரா என்ற கன்னடப் படத்திலும் நடிக்கிறார் பிரியா ஆனந்த். முத்துராமலிங்கம், கூட்டத்தில் ஒருவன் இவ்விரு படமும் தமிழில் ரிலீஸாக விருப்பதும் குறிப்பிடத்தக்கது. #Minsarappoo


இப்போதைக்கு ஹிந்தி உலகின் டார்லிங்  சோனாக்‌ஷி சின்ஹா தான். முருகதாஸ் இயக்கத்தில் இவரின் அகிரா ரிலீஸாகவிருப்பதே காரணம். இப்படத்திற்கான டிரெய்லரும் டீஸரும் செம ஹிட். அதே கையோடு அகிராவின் புது போஸ்டர் ஒன்றையும் ரிலீஸ் செய்திருக்கிறார் சோனாக்‌ஷி. அகிரா உதைப்பது போன்று வெளியாகியிருக்கும் அந்தப் போஸ்டர் படத்திற்கான நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்துள்ளது. படத்திற்காக தற்காப்புக் கலைகளை பயின்று பின்தான் படத்தில் நடித்திருக்கிறார் சோனாக்‌ஷி. அகிரா என்றால் பலம் என்று அர்த்தம். அகிரா படத்திற்கு சோனாக்‌ஷி தான் பலம்! #boldandbeautiful


மகேஷ்பாபுவின் தெலுங்கு டப்பிங் படங்கள் மட்டுமே பார்த்திருப்பீங்க.. மகேஷ்பாபு நேரடியா நடிக்கிற தமிழ் படத்தையும் இனி பார்ப்பீங்க! ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கவிருக்கும் படத்திற்கான படப்பிடிப்பு இன்று தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மகேஷ்பாபுவிற்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இசை ஹாரிஸ் ஜெயராஜ். தமிழ் பேசத்தெரிந்த தெலுங்கு நடிகர், சென்னையில் படித்துவளர்ந்தவர், இவரின் தெலுங்கு படங்கள் தமிழில் டப்பாகி ஹிட்டடித்திருக்கிறது என்பதால் தமிழ் ஹீரோக்களுக்கு சவாலாகவும் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #WelcomPrince 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்