பா.இரஞ்சித் இயக்கத்தில் விஜய்!! | pa. Ranjith to direct vijay movie

வெளியிடப்பட்ட நேரம்: 22:35 (29/07/2016)

கடைசி தொடர்பு:15:12 (01/08/2016)

பா.இரஞ்சித் இயக்கத்தில் விஜய்!!

கபாலி படத்தின் மெகா ஹிட் வெற்றியை அடுத்து தித்திப்பில் இருக்கிறார் இயக்குனர் பா.இரஞ்சித். கபாலி படத்தின் முதல் ஆறு நாள் வசூல் மட்டும் 321 கோடி ரூபாய் என்ற அறிவிப்போடு நேற்று கபாலி படத்திற்கான வெற்றிவிழா நிகழ்ச்சி நடந்தது.நேற்று மலாய் மொழியில் கபாலி வெளியாகியது. அடுத்த மாதம் சீன, ஜப்பான், தாய்லாந்து மொழிகளில்  ரிலீஸாகபோகிறது என்பதை நினைக்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார் தயாரிப்பாளர் தாணு.  சமீபத்திய பேட்டியில், கபாலி-2 எடுப்பதற்குரிய வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்து இருந்தார்
 
இவை இப்படி இருக்க, கோலிவுட்டில், டாப் இயக்குநர்களின் பட்டியலில் தற்போது இருக்கிறார் பா.இரஞ்சித் .கபாலி படத்திற்கு முன்னரே , இயக்குனர் பா.இரஞ்சித் சூர்யாவை வைத்து ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்திற்கு ஒரு படம் செய்வதாக இருந்தது. கபாலி படத்திற்குப் பின், மீண்டும் சூர்யா படத்தை தொடங்க இருந்தார் பா.இரஞ்சித்

இதற்கிடையில் தயாரிப்பாளர் அவதாரமும் எடுக்க இருக்கிறார் பா.இரஞ்சித். தனது உதவியாளர் ஒருவர் இயக்கும் படத்தை , தயாரிக்க இருக்கிறார் .அந்தப் படத்தில் , அதர்வா நாயகனாக நடிக்க இருக்கிறார்.

தலைப்பில் இருக்கும் விஜய் மேட்டர் என்ன என கேட்கிறீர்களா?. பொறுமை பாஸ். விஜய்க்கு கதை சொல்ல,பா.இரஞ்சித் அழைக்கப்பட, விஜயிடம் கதை சொல்லியிருக்கிறார் பா.இரஞ்சித். இரு பக்கமும், க்ரீன் சிக்னல், என்பதால், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, இன்னும் சில நாட்களில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, கபாலி-2, சூர்யா படம், விஜய் படம், என தொடர் மகிழ்ச்சியில் இருக்கிறார் இயக்குனர் பா.இரஞ்சித்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்