சிம்புவின் அடுத்த ஹீரோயின்! முத்தையாவை டிக் செய்த சூர்யா! #க்விக்-செவன்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பை திண்டுக்கலில் முடித்துவிட்டு சென்னை திரும்பியிருக்கிறது படக்குழு. இப்படத்தில் சிம்பு மூன்று வேடத்தில்  நடிக்கிறார். ஸ்ரேயா மட்டுமே நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார். மற்றொரு நாயகி ஹன்சிகா என்று கூறிவந்த நிலையில், அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ஹன்சிகா. தனது ட்விட்டரில், “ அச்செய்தி வதந்தியே, உண்மை இல்லை” என்று ட்விட்டியிருக்கிறார். #HeroineWanted


ராஜேஷ் இயக்கத்தில் “கடவுள் இருக்கான் குமாரு”, பிரசாந்த் இயக்கத்தில் “ப்ரூஸ்லி” படத்திலும் நடித்துவருகிறார் ஜி.வி.பிரகாஷ். இவ்விரு படங்களின் படப்பிடிப்பும் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் ராஜூவ் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க தேதியை ஒதுக்கியிருக்கிறார் ஜி.வி. இப்படத்திற்கான 9 பாடல்களில் 4 பாடல்களை முடித்துக் கொடுத்துவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். தவிர சாய்பல்லவி தமிழில் நடிக்கும் முதல் படம் இது என்பது கூடுதல் செய்தி! #Malare


'வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் எழில் இயக்கவிருக்கும் படத்தில் உதயநிதி நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு நாயகியாக ரெஜினா நடிக்கவிருக்கிறார். காமெடிக்கு சூரி இப்படத்தில் நடிக்கவிருக்கிறார். முதல்கட்ட பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. இசை டி.இமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட்டில் தொடங்கவிருக்கிறது. #SuperJi


இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகிவந்த நிலையில், ரஞ்சித் அடுத்ததாக விஜய்யை இயக்கவிருப்பது உறுதியாகியிருக்கிறது. சிங்கம் மூன்றாம் பாகத்தில் நடித்துவரும் சூர்யா அப்படத்தைத் தொடர்ந்து, முத்தையா இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். குட்டிப்புலி, கொம்பன், மருது படங்களை இயக்கியவர் முத்தையா என்பது குறிப்பிடத்தக்கது. #AllTheBest


ஜீவா, காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகிவரும் படம் தான் கவலை வேண்டாம். இப்படத்திற்காக நீச்சல் குளத்தில் ஒரு பாடல் படமாக்கப்பட்டது. அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. ரொமாண்டிக் பாடலாக உருவாகியிருக்கும் இப்பாடலே படத்தின் அறிமுகப் பாடல் என்றும் கூறுகின்றனர் படக்குழுவினர். மஹாப் ஹோட்டலின் நீச்சல் குளத்தில் படமாக்கப்பட்ட இந்தப் பாடலுக்காக இருவரும் சுமார் 7 மணிநேரம் நீச்சல் குளத்தில் இருந்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில், அஜித்தின் 57வது படத்திற்கு தயாராகிவருகிறார் காஜல் அகர்வால். #Thala57


கபாலி ஜூலை 22ம் தேதி வெளியாகி, இன்று வரையிலும் எல்லா திரையரங்கிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. கபாலியால பல படங்கள் தள்ளிச்சென்ற நிலையில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 5ம் தேதி ஏழு படங்கள் வெளியாக உள்ளன. ஜீவாவின் “திருநாள்”, “மீண்டும் ஒரு காதல் கதை”, ஜெய் நடிக்கும் “ தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்”, சண்டிகுதிரை, என்னமா கதவுடுறானுங்க, காதல் காலம் படங்கள் வெளியாகின்றன.மேலும், மோகன்லால், கெளதமி நடிக்கும் 'நமது' படமும் ரிலீஸாகிறது.வரும் வெள்ளிக்குள் இதில் மாற்றங்களும் நடக்கலாம் பாஸ்! #MovieFriday


காலில் ஏற்பட்ட காயத்தால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார் நடிகர் கமல்ஹாசன். முதலில் அவரின் காலில் சிறிய அளவில் அறுவை சிகிச்சை ஒன்று நடந்தது. தற்பொழுது மீண்டும் காலில் வலி ஏற்பட்டுள்ளது. எனவே மீண்டும் ஒரு சின்ன அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. தற்பொழுது நலமாக இருக்கிறார் கமல். கமலின் நிலையைக் கேள்விப்பட்ட உடனே கமலுக்கு போன் செய்து உடல்நலம் பற்றி விசாரித்திருக்கிறார் நடிகர் ரஜினி. #GetwellSoon

Do you like the story?

Please Appreciate the Author by clapping!