சுந்தர்.சி படத்தை விஜய் தவிர்த்ததன் காரணம்?

சில வாரங்களுக்கு முன்பு நடிகர் விஜய்யை சந்தித்துப் பேசியிருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி. தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர்.சி. இயக்கவிருக்கும் பிரம்மாண்ட  படைப்பான 'சங்கமித்ரா' படத்திற்கான கதையை விஜய்யிடம் கூறியதாகச்  சொல்லப்படுகிறது.

சுந்தர்.சி கூறிய 'சங்கமித்ரா' கதைக்கான ஸ்கிரிப்ட் விஜய்க்கு மிகவும் பிடித்துப் போய்விட்டதாம். ஆனாலும் இப்படம் மிகப்பெரிய பட்ஜெட் படம் என்பதாலும், பாகுபலியை விட அதிக பட்ஜெட்டில் உருவாகவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின. இப்படத்திற்கு 250 நாட்களுக்கான கால்ஷீட்டை விஜய்யால் ஒரே நேரத்தில் தரமுடியாது என்ற காரணத்தால், தவிர்த்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

விஜய் தற்பொழுது பரதன் இயக்கத்தில், விஜய் 60வது படத்தில் நடித்துவருகிறார். அதுமட்டுமின்றி சிவாஜி புரொடக்‌ஷன் தயாரிப்பில் ஒரு படத்திற்கும் ஒப்பந்தமிட்டுள்ளார். அது எப்படியும் அட்லி இயக்கத்தில் தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அட்லி விஜய் கூட்டணியில் தெறி மிகப்பெரிய ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி, விஜய்யை சந்தித்து ரஞ்சித் கூறிய கதைக்கு விஜய் ஓகே சொல்லிவிட்டாராம். தெறி, கபாலியைத் தொடர்ந்து தாணு தான் இப்படத்தையும் தயாரிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

சுந்தர்.சி இயக்கவிருக்கும் 'சங்கமித்ரா' படத்திற்கான முதல் கட்டப்பணிகள் தொடங்கி நடந்துவருகிறதாம். படப்பிடிப்புக்கு முன்னர் பெரிய ஹீரோ ஒருவரை படத்தின் பிரதான கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்வது குறித்து, பேசிவருகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!