வெளியிடப்பட்ட நேரம்: 17:17 (02/08/2016)

கடைசி தொடர்பு:18:32 (02/08/2016)

காந்தி போல தோள் தாங்க இன்று நடந்தேன்..! கமல்ஹாசன் ட்விட்

'காந்தியார் போல தோள் தாங்க இருவருடன் சேர்ந்து இன்று, மருத்துவமனையில் நடந்தேன்; வலி சற்று குறைந்திருக்கிறது' என்று நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலக மாடிப்படியில் இருந்து கடந்த 13ம் தேதி நடிகர் கமல்ஹாசன் தவறி விழுந்தார். இதையடுத்து உடனடியாக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கமல்ஹாசன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சையும் நடைபெற்றது. தற்போது, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகிறார்.

இந்த நிலையில், மருத்துவமனையில் இன்று நடந்ததாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், "ரசிகர்களுடனும் நண்பர்களுடனும் பகிர ஓர் நற்செய்தி. இன்று எழுந்து நடந்தேன். காந்தியார் போல தோள் தாங்க இருவருடன்தான் என்றாலும் முன்னேற்றம். வலி சற்று குறைந்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்