வேற லெவல் நமீதா...வேர்ல்டு டிரண்ட் நெருப்புடா! #க்விக் - செவன்

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சிங்கம் மூன்றாம் பாகத்திற்கான படப்பிடிப்பு நடந்துவருகிறது. இப்படத்தை முடித்த கையோடு விக்ரமுடன் சாமி இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பைத்  தொடங்கவிருக்கிறார் ஹரி. இதற்கான அறிவிப்பை இன்று 'இருமுகன்' பட இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்தார் ஹரி. இருமுகன் பட தயாரிப்பாளர் ஷபுதமீம்ஸ் தான் சாமி 2 படத்தைத் தயாரிக்கவிருக்கிறார். ஒளிப்பதிவாளர் ப்ரியன், விக்ரம் இருவரையும் மேடைக்கு அழைத்து, ரசிகர்கள் முன்னிலையில் அறிவிப்பை வெளியிட்டார் ஹரி. அப்போ த்ரிஷா இருக்காங்களா பாஸ்? #VikramIsCop


ராம், மிஸ்கின், பூர்ணா  நடிக்கும் 'சவரக்கத்தி' படத்தை ஆதித்யா இயக்கிவருகிறார். இப்படத்திற்கு இசை அரோல் கரோலி. மிஸ்கின் தயாரித்துவரும் இப்படத்தில் ராமிற்கு வில்லனாக மிஸ்கின் நடிக்கிறார் என்பது ஊரறிந்த செய்தி. இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கிவிட்ட இப்படத்திற்கான புரமோஷன் மற்றும் அதைச்சார்ந்த விளம்பர வேலைகளில் பிஸியாகிவிட்டது படக்குழு. இப்படத்தின் சிங்கிள் டிராக்கை வரும் 4ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இந்த மாத இறுதியில் பாடலும், படத்தை செப்டம்பரில் ரிலீஸ் செய்யவும் திட்டமாம். #RamVsmysskin


நெருப்புடா... உலக அளவில் டிரெண்டான வார்த்தையென்றால் அது நெருப்புடா. எதார்த்தமாக அதிகப்படியான மக்களின் தற்போதைய சொல்லாடல் நெருப்புடா தான். இதோ தீபாவளிக்கு உருவாகும் பட்டாசுகளுக்கு “நெருப்புடா” என்று பெயரும், மத்தாப்புகளுக்கு “மகிழ்ச்சி” என்ற பெயரும் வைத்து சிவகாசியின் சில பகுதிகளில் தயாரிக்கப்படும் பட்டாசுகளுக்கு பெயர் வைத்தாகிவிட்டது. இதனால் பட்டாசு விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பட்டாசு தொழிலாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். #HappyDiwali   


சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்தின் 57வது படத்திற்கான படப்பிடிப்பு ஸ்லோவேனியாவில் இன்று தொடங்கியது. இப்படத்தில் காஜல் அகர்வால் மற்றும் அக்‌ஷரா ஹாசன் நாயகிகளாக நடிக்கிறார்கள். கருணாகரன் காமெடி வேடத்தில் நடிக்கிறார். முதலில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க பல நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து பெரும் சிரமத்திற்கு நடுவே ஹீரோயினை முடிவுசெய்தார் சிவா. இந்நிலையில் வில்லனாக நடிக்க அர்ஜூன், அரவிந்த் சாமி, விஜய்சேதுதியிடம் கேட்டப்பட்டு, இறுதியில் பாபிசிம்ஹாவை அஜித்திற்கு வில்லனாக நடிக்க ஓகே செய்திருப்பதாகச்  சொல்லப்படுகிறது. #Thala57


'நான்கடவுள்' ராஜேந்திரன் வில்லனாக, காமெடியனாக கெத்து காட்டிய பல படங்கள் இருந்தாலும், விஜய்யுடன் தெறி படத்தில் காமெடியிலும், எமோஷனிலும் சமீபத்தில் வெகுவாகப்  பாராட்டப்பெற்றார். இந்நிலையில், மீண்டும் விஜய்யுடன் அவர் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பரதன் இயக்கத்தில் 'விஜய் 60' படத்தில் ராஜேந்திரன் டிராபிக் கான்ஸ்டபிளாக நடிக்கவிருக்கிறாராம். தற்பொழுது கோயம்பேடு பஸ் நிலையத்திற்கான செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த செட்டில் தான் ராஜேந்திரனும் நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்படத்தில் மெயின் காமெடியனாக சதீஷ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எப்படியோ அடுத்தவருட பொங்கல் படம் ரிலீஸாகியே தீரணும் பாஸ். #Vijay60     


ஏ.ஆர்.முருகதாஸ் தன்னுடைய அடுத்த படத்திற்கான படப்பிடிப்பில் இறங்கிவிட்டார். மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கும் தமிழ், தெலுங்கில் உருவாகவிருக்கும் படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியிருக்கிறது. பத்துநாட்கள் படப்பிடிப்பு  நடைபெறவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இப்படத்திற்கு 'வாஸ்கோடாகாமா' என்று பெயரிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்கவிருக்கும் இப்படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மெளனகுரு படத்தின் இந்தி ரீமேக்கான, சோனாக்‌ஷி சின்ஹா நடிக்கும் “அகிரா” ரிலீஸூக்கு ரெடியாகிவிட்டதும் குறிப்பிடத்தக்கது. #Akira


நமீதா இஸ் பேக். நமீதா நடிக்கும் 'பொட்டு' படத்தின் புகைப்படங்கள் கொஞ்ச நாட்களுக்கு முன்பு இணையத்தில் வெளியாகி வைரலடித்தன. அந்தப் படம் பற்றித் எந்தத் தகவலும் இல்லையே என்று விசாரித்ததில், சமீபத்தில் 'பொட்டு' படத்தின் படப்பிடிப்பு கொல்லிமலையில் நடந்து முடிந்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 2000 அடி உயர மலைப்பகுதியில் அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார்கள் படக்குழுவினர். “நாங்கள் படப்பிடிப்பு நடத்திய இடம் ரொம்பவும் மேடானது. வண்டி எதுவும் போகாது. 4 கிலோமீட்டர் எல்லோரும், எல்லா சாதனங்களையும் நடந்தே எடுத்துச்சென்று படமாக்கினோம். 'சவுகார்பேட்டை' படத்தில் இருந்த குறைகள் நிச்சயமாக பொட்டு படத்தில் இருக்காது. வேறு மாதிரி இருக்கும் என்றார் இயக்குநர் வடிவுடையான். #Namitha

Do you like the story?

Please Appreciate the Author by clapping!