தம்பி ராமையாவின் தாயார் காலமானார் | Thambi Ramaiah's mother passed away

வெளியிடப்பட்ட நேரம்: 08:53 (03/08/2016)

கடைசி தொடர்பு:08:59 (03/08/2016)

தம்பி ராமையாவின் தாயார் காலமானார்

பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் தம்பிராமையாவின் தாயார் பாப்பம்மாள் நேற்று மாலை மதுரையில் காலமானார். அவருக்கு வயது 74.

கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் மதுரையில் உள்ள மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனளிக்காததால் நேற்று, ஆகஸ்ட் இரண்டாம் தேதி மாலை இயற்கை எய்தினார்.

பாப்பம்மாள் - ஜெகநாதபிள்ளை தம்பதிக்கு சேதுபதி, அம்பிகாபதி, ராஜகுமாரன், தம்பி ராமையா என 4 மகன்களும் அஞ்சலிதேவி என ஒரு மகளும் உள்ளனர்.

அம்மையாரின் இறுதிச்சடங்கு, அவரது சொந்த ஊரான புதுக்கோட்டையில் உள்ள ராராபுரத்தில் இன்று (ஆகஸ்ட் 3) நடைபெறவுள்ளது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்