'பசி' நாராயணன் மனைவிக்கு முதல்வர் ரூ.10 லட்சம் நிதியுதவி!


பிரபல திரைப்பட நடிகர் மறைந்த "பசி" நாராயணன் குடும்பத்தினரின் வறுமையான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவரது மனைவி வள்ளிக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் நிரந்தர வைப்பு தொகையாக வைக்கப்பட்ட 10 லட்சம் ரூபாய்க்கான ஆவணத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று வழங்கினார்.

எம்.ஜி.ஆர் நடித்த "அன்பே வா", "ஆயிரத்தில் ஒருவன்" உள்ளிட்ட 500 திரைப்படங்களுக்கு மேல் நடித்த பிரபல திரைப்பட நடிகர் மறைந்த "பசி" நாராயணன் குடும்பத்தினர், அவரது மறைவுக்குப் பிறகு எவ்வித வருமானமும் இன்றி வறுமையான சூழலில் வாழ்ந்து வருவதாகவும், வாழ்வாதாரத்திற்கு மிகவும் கஷ்டப்படுகின்றனர் என்ற செய்தியை அறிந்த முதலமைச்சர் ஜெயலலிதா, "பசி" நாராயணன் குடும்பத்தினரின் வறுமையான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து "பசி" நாராயணனின் மனைவி வள்ளிக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கிட உத்தரவிட்டார்.

மேலும், இந்த 10 லட்சம் ரூபாய் வள்ளி பெயரில் "தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில்"" வைப்பு நிதியாக வைக்கப்பட்டு, அந்த வைப்பு நிதியிலிருந்து வட்டியாக மாதந்தோறும் 8,125 ரூபாய் வள்ளிக்கு கிடைக்கப் பெறும் என்று முதலமைச்சர ஜெயலலிதா 24.7.2016 அன்று அறிவித்தார். அதன்படி, "பசி" நாராயணனின் மனைவி வள்ளிக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் நிரந்தர வைப்பு தொகையாக வைக்கப்பட்ட 10 லட்சம் ரூபாய்க்கான ஆவணத்தை வழங்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!