Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“தனுஷ், சிவா, விஷால், நிவின், பார்வதி” இவங்க தான் இன்றைய வைரல்! #க்விக்-செவன் #QuickSeven

கடந்த வருடம் 2015ல் தனுஷின் தங்கமகன் ரிலீஸானது. இந்த வருடம் தனுஷின் எந்தப் படமும் ரிலீஸாகவில்லை. ஆனால் புதிய படங்களில் மட்டும் அடுத்தடுத்து கமிட்டாகி வருகிறார் தனுஷ். இதோ, இந்த வருடத்திற்கான தனுஷின் முதல் படம் “தொடரி”. பிரபுசாலமன் இயக்கத்தில் படம் ரெடி. இன்னும் இறுதிக்கட்ட பணிகளே பாக்கி. கபாலியால் தொடரி தள்ளிப்போனதால், இந்த மாதம் 19ம் தேதியோ அல்லது செப்டம்பர் முதல் வாரத்திலோ தொடரியை வெளியிட படக்குழு தீவிர ஆலோசனையில் இருக்கிறார்கள். எது எப்படியென்றாலும் தீபாவளிக்கு “கொடி” உறுதி. #Thodari_Kodi


விக்ரமிற்குப் பிறகு 'ரெமோ' என்றால் அது சிவகார்த்திகேயன் தான். நான் சொல்லல பாஸ், விக்ரமே சொல்லிவிட்டார். ரெமோ படத்திற்கான படப்பிடிப்பு நேற்று ஆடிப் பெருக்கை முன்னிட்டு நல்லபடியாக முடித்துவிட்டனர். நேற்றுப் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், படக்குழுவின் சீனியர், பி.சி.ஸ்ரீராமிற்கு மாலை அணிவித்துக்  கெளரவித்தனர். மேலும் தங்களுக்குள்ளேயே மாறிமாறி செல்ஃபி எடுத்து அன்பைப்  பறிமாறிக்கொண்டனர். ரெமோ அக்டோபர் 7- ஐ நோக்கி விரைகிறான். #REMO


மருது படத்தைத் தொடர்ந்து விஷால் நடித்துவரும் படம் கத்திச்சண்டை. இப்படத்தை சுராஜ் இயக்கிவருகிறார். இப்படத்தில் முதன்முறையாக தமன்னா-விஷால் இணைந்து நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் மற்றோர் ஸ்பெஷல் வடிவேல். தற்பொழுது கிழக்குக்  கடற்கரை சாலையில் மூன்று நாட்களாக படப்பிடிப்பு நடந்துவருகிறது. கார் சேசிங் காட்சிகள் ஷூட் செய்யப்பட்டு வருகின்றன. அக்காட்சிகள் படத்தில் முக்கிய காட்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. #Fighter


தெறி படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அட்லி, அடுத்த படத்துக்கான கதை விவாதத்தைத்  தொடங்கிவிட்டார். இதுபோக தயாரிப்பாளராகவும் தன்னை முன்னிலைப்படுத்த அவர் முயற்சி செய்து வருகிறார். அந்த வகையில் ஜீவா, ஸ்ரீ திவ்யாவை வைத்து ஏற்கெனவே ஒரு படத்தைத்  தயாரித்து வருகிறார் அட்லி. அந்தப் படத்தின் பெயர் 'சங்கிலி புங்கிலி கதவ தொற'.  அடுத்ததாக நிவின் பாலி நடிக்கும் தமிழ் படம் ஒன்றையும் தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் மூலம் அவரின்  நண்பர் சூர்யா இயக்குநராக அறிமுகமாகிறார்.


கொச்சியில் ஒரு கல்லூரியில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பார்வதி. அவர் பேசும்போது, “ குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் கொடுமை, ஈவ் டீசிங் சமூக வலைத்தளங்கள் மூலமாக பெண்கள் மீதான தாக்குதல் இவற்றைத்  தானும் சந்தித்துள்ளதாகக்  கூறினார். மேலும் அவற்றில் இருந்து பெண்கள் தங்களையும் குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்ள விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி பேசினார். இவ்வாறு வெளிப்படையாகப்  பேசியதால் மலையாள திரையுலகே பார்வதியைப் பாராட்டிவருகிறது. தில் லேடி!


பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகை ஸ்ரத்தா கபூர். தற்போது இவர் ஒகே ஜானு என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் அடுத்தாண்டு வெளிவர இருக்கிறது. ஸ்ரத்தா கபூருக்கு நெகட்டீவ் ரோலில் நடிக்க ஆசை வந்துள்ளதாம். இதுப்பற்றி அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது... ‛‛எனக்கு வில்லி மாதிரியான  வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. அந்த மாதிரி வேடங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயம் நான் நடிப்பேன்'' என்று கூறியுள்ளார்.  


சிங்கம் மூன்றாம் பாகத்தைத்  தொடர்ந்து, சூர்யா அடுத்ததாக இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்கலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ரஜினிமுருகன் படத்தில் பிரபலமானவர் கீர்த்திசுரேஷ். தற்பொழுது விஜய்60 மற்றும் ரெமோ படங்களில் நடித்து வருகிறார். குட்டிப்புலி, கொம்பன், மருது படங்களை இயக்கியவர் முத்தையா என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?