Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிவினும் அனுராக்கும்... லியோவும் ஹிலரியும்... கூடவே நம்ம சரோஜா! #க்விக்-செவன்

சிவா, வைபவ், பிரேம்ஜி நடிப்பில் யுவன் இசையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் 2008ல் வெளியானது சரோஜா. இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க திட்டமிட்டுவருவதாக செய்திகள் பரவிவந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் வெங்கட்பிரபு. “நான் தற்போது ’சென்னை 28’ இரண்டாம் பாகத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறேன். ‘சரோஜா - 2’ படத்தை பற்றி நான் சிறிதளவு கூட யோசித்தது இல்லை. தற்போது என்னுடைய முழு கவனமும் 'சென்னை 28' - பாகம் 2 மீது தான் இருக்கிறது”என்றிருக்கிறார். #WeWantMangathaa2


நண்பன் படத்திற்குப் பிறகு தமிழை விட்டு, இந்தியில் பிஸியானவர் இலியானா. அடுத்தடுத்து இந்திப் படங்கள் ஹிட்டடிக்க அங்கேயே செட்டிலாகிவிட்டார். அக்‌ஷய்குமாருடன் அவர் நடிக்கும் ‘ரஸ்டோம்’ ரிலீஸாகவிருக்கிறது. இலியானாவிடம் பாலிவுட் பேட்டியில், உங்கள் பழைய புதிய காதல் பற்றிச்சொல்லுங்க என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “காதலிப்பதும், காதலித்தபின் பிரிவதும் அவரவர்களுக்கான தனிப்பட்ட உணர்வு. அதற்கான அவர்களைப் பழிவாங்கவேண்டும் என்றெல்லாம் கிடையாது. சில சமயங்களில் பிரிவு வருவது சகஜம். அதற்காக அவர்களை மறந்துவிடவும் முடியாது. நானும் காதலில் தோற்றவள்தான். காதல் தோல்வி என்னை இன்னும் பலமாக்கியிருக்கிறது” என்கிறார் இலியானா. #SabashBaby!


மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஸ்ரீகணேஷ், இயக்குநராக அறிமுகமாகிறார். “எட்டு தோட்டாக்கள்” என்று பெயரிடப்பட்டுள்ளது. எட்டு நபர்களால் உருவாகும் ஒரு க்ரைம் காட்சி, அதனால் மனதளவில் பாதிக்கப்படும் குடும்பம். இதுவே படத்தின் ஒன்லைன். மலையாளத்தில் “மகேஷிண்டே பிரதிகாரம்” படத்தில் நடித்த அபர்னா தமிழில் நாயகியாக அறிமுகமாகிறார். நாசர், எம்.எஸ்.பாஸ்கர், மைம்கோபி மற்றும் தயாரிப்பாளர் சிவா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில், பரிசு, ஒரு கோப்பை தேநீர் போன்ற குறும்படங்களால் பெரிதும் பேசப்பட்டவர் ஸ்ரீகணேஷ். #BestOfLuckBro!


தமிழ், மலையாளத்தைக் கடந்து இந்தித் திரையுலகிலும் அடியெடுத்துவைக்கிறார் பிரேமம் நாயகன் நிவின்பாலி. பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப்புடன், தான் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இந்தியில் கால்பதிக்கவிருப்பதை உறுதிசெய்திருக்கிறார் நிவின். லையாள நடிகர்கள் பலருக்குமான ஆசை, அனுராக் படத்தில் நடிக்கவேண்டும் என்பது. நிவினுக்கு கைகூடியிருக்கிறது. நிவின்பாலி தமிழில் மூன்று படங்கள் கமிட்டாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. #MultiLanguageStar


அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்? இதுவே உலக அரங்கில் கவனிக்கப்பட்டுவரும் ஒரு செய்தி. ஹாலிவுட்டின் பல பிரபலங்கள் தங்கள் ஆதரிக்கும் வேட்பாளர் குறித்து  இணையத்தில் பகிர்ந்துவருகின்றனர். ஆஸ்கார் நாயகன் லியானார்டோ டி காப்ரியோ தனக்கான ஆதரவை ஹிலரி க்ளிண்டனுக்காக தெரிவித்துள்ளார். “வாக்களிப்பது எவ்வளவு முக்கியமான ஒன்று என்பதை உணர்ந்து வாக்களிக்கவேண்டும். பருவநிலை மாறிவருகிறது. அறிவியல் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. க்ளைமேட் மாற்றம் என்பதும் உண்மை என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.  சில மாதங்களுக்கு முன்பு ஆஸ்கார் விருது விழாவில் லியனார்டோ, பருவநிலை மாற்றம் சார்ந்த அவரின் பேச்சு அனைவராலும் கவரப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. #WellDoneMan!  


மலையாளத்தில் நிவின்பாலி மற்றும் இஷா தல்வார் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த தட்டத்தின் மறையத்து படத்தின் தமிழ் ரீமேக் “மீண்டும் ஒரு காதல் கதை”. மித்ரன் R. ஜவஹர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். நாளை வெளியாகவிருந்த இந்தப் படத்தைப் பார்த்த சில தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் படத்தை சரியான நேரத்தில் வெளியிட்டால் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று கூறினர். நாளை ஜீவா, நயன்தாரா நடிப்பில் திருநாள், மோகன்லாலின் நமது, ஜெய், சந்தானம் நடிப்பில் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் ஆகிய படங்கள் வருகின்றன. ஆகவே மீண்டும் ஒரு காதல் கதை இரண்டு வாரங்கள் தள்ளி நம் பார்வைக்கு வரவிருக்கிறது. #Well-Come!


“நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்” படத்தின்மூலம் “என்னாச்சி.....” என்று நம்மை கேட்க வைத்தவர் கொஞ்சநாளாக காணவில்லையே என்னாச்சு என்று விசாரித்தபோது ‘இருக்கேன் பாஸ்’ என்றார். ஆம், அந்தப் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் ஆரம்பித்த “ஒரு பக்கக் கதை” எப்ப ரிலீஸ் என்று விசாரித்தோம். இந்த மாதம் ரிலீஸ் என்று பதில் கிடைத்தது. இப்படமும் உண்மை சம்பவத்தை மையமாகவே கொண்டு உருவாகிவருகிறது. காளிதாஸ் மேகா ஆகாஷ் நடித்த இப்படத்தின் கதை, ‘காதலர்களுக்கு இடையே நிகழும் பிரச்னைதான். ஆனா வேற ட்ரீட்மெண்ட் பாஸ்’ என்கிறார். #ComeOn..ComeOn...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?