பாகுபலி - 2 ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு!

ராஜமெளலி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் வெளியாகி ஹிட் அடித்த பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தின் வெளியீடு குறித்து படக்குழு அறிவித்திருக்கிறது.

பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, நாசர், ரம்யாகிருஷ்ணன் ஆகியோரின் நடிப்பில் உருவாகி முதல் பாகம் விமர்சன ரீதியிலும், வசூல் சாதனையிலும் பெரிதும் பேசப்பட்டது. பாகுபலி கட்டப்பாவை ஏன் கொன்றார், அனுஷ்கா கதாபாத்திரத்தின் பின்னணி என்ன என்பது போன்ற சுவாரஸ்ய முடிச்சுகளுடன் முதல்பாகத்தை முடித்திருந்தார் ராஜமெளலி. அதனால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியது.

இந்நிலையில், “பாகுபலி தி கன்க்ளூஷன்” அடுத்தவருடம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர். இறுதிப்பாகத்திற்கான இறுதிக்கட்ட க்ளைமேக்ஸ் பணிகள் தற்பொழுது படமாக்கப்பட்டுவருகின்றன. படமாக்கப்படும் அதே நேரத்தில் அதற்கான அனிமேஷன், வீடியோ எபெக்ட்ஸ் வேலைகளும் நடந்துவருகிறது.

பாகுபலி முதல்பாகத்தை தமிழில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும், இந்தியில்  கரண்ஜோகரும் வெளியிட்டனர். அதுபோல இரண்டாம் பாகத்தை தமிழில் யார் வாங்கி வெளியிடுகிறார் என்பதை ரகசியமாக வைத்திருக்கிறார்கள் படக்குழுவினர். ஆனால் இரண்டாம் பாகத்தின் தமிழ் உரிமையை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் 45 கோடிக்கு வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

அதுபோல, இந்தியில் வெளியிடும் கரண்ஜோஹரின் தர்மா தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய ட்விட்டரில், “பாகுபலியின் கனவுகளோடு மீண்டும் இணைந்திருக்கிறோம். பாகுபலி தி கன்க்ளூஷன் ஏப்ரல் 28, 2017ல் வெளியாகும்” என்று அறிவித்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!