தள்ளிப்போனது கருடா... முந்தியது சாமி- 2..! பின்னணித் தகவல் | Vikram to play a negative character in 'Saamy 2'?

வெளியிடப்பட்ட நேரம்: 12:12 (06/08/2016)

கடைசி தொடர்பு:12:42 (06/08/2016)

தள்ளிப்போனது கருடா... முந்தியது சாமி- 2..! பின்னணித் தகவல்

விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் நடிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கிவரும் படம் இருமுகன். இப்படத்தைத் தொடர்ந்து விக்ரம், சாமி இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருப்பது உறுதியாகியிருப்பதாக சொல்லப்படுகிறது.

ஏனெனில், இருமுகன் முடிந்தகையோடு, விக்ரம் ஏற்கெனவே நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் “கருடா” படத்திற்கான படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று சொல்லப்பட்டது. திரு இயக்கத்தில் காஜல் அகர்வால், நாசர், கருணாஸ், இந்தி நடிகர் மஞ்ச்ரேகர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இப்படத்தை சில்வர்லைன் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது.

ஆனால் பொருளாதார சிக்கல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிச்செல்வதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் “அஜித் 57” படத்திற்காக புது ஹேர்ஸ்டைலுடன் காஜல் அகர்வால் பிஸியாகிவிட்டார். இந்தக் காரணங்களால், படப்பிடிப்பை கொஞ்ச நாளுக்கு தள்ளிவைக்க படக்குழு முடிவெடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

எனவே, ஹரி இயக்கத்தில் சாமி 2ம் பாகத்தில் விக்ரம் நடிப்பார் என்றும், இப்படத்தில் நெகட்டிவ் ரோலில் விக்ரம் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. மேலும், இருமுகன் தயாரிப்பாளர் ஷிபுதமீம்ஸ் தான் சாமி 2-ம் பாகத்தையும் தயாரிக்கவிருக்கிறார்.பிரியன் ஒளிப்பதிவு செய்ய, இசை ஹாரிஸ் ஜெயராஜ் என்பது ஏற்கெனவே உறுதியாகியிருக்கிறது. இந்த வருட இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close