வெளியிடப்பட்ட நேரம்: 18:44 (08/08/2016)

கடைசி தொடர்பு:11:14 (10/08/2016)

2.0க்கு ரஜினி ரெடி! சல்மானுக்கு திருமணம் நடக்குமா?.. தள்ளிப்போகும் சிம்பு!... #க்விக்-செவன்-#QuickSeven

கார்த்தி நடிக்கும் 'காற்று வெளியிடை' படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்துவருகிறது. படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். இந்நிலையில், சென்னை அபிராமபுரத்தில் உள்ள மணிரத்னம் அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் அலுவலகத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள்  எரிந்து சேதம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை.


'தள்ளிப்போகாதே'... என்று பாடல் டிரெண்டடித்த 'அச்சம் என்பது மடமையடா' பட ரிலீஸும் தள்ளிப்போகிறது. இப்படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நாக சைத்தன்யா ஹீரோவாக நடிக்கிறார். தெலுங்கில் படம் ரெடி. ஆனால் தமிழில் சிம்பு படப்பிடிப்பிற்கு வராததால் ஷூட்டிங் பாதியிலேயே நின்றது. தற்பொழுது இப்படத்தின் தமிழ் டப்பிங் வேலையில் இறங்கிவிட்டார் சிம்பு. மேலும் தள்ளிப்போகாதே பாடலுக்கான ஷுட்டிங்கிலும் கலந்துகொள்வதாக உறுதியளித்துவிட்டாராம். ஆகஸ்டில் வெளியாகவேண்டிய இப்படம் செப்டம்பரில் ரிலீஸாகிறது. #GoodLuck


நவசுதீன் சித்திக், எமிஜாக்ஸன் நடிக்கும் “ஃப்ரீக்கி அலி” (Freaky Ali) படத்தின் டிரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சுல்தான் ஹீரோ சல்மான். ஐம்பது வயதைக் கடந்துவிட்ட சல்மான் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும், இவரிடம் முதலில் கேட்கப்படும் கேள்வி, 'எப்போ கல்யாணம்? 'அவரும் சலிக்காமல் பதிலளித்து வருகிறார். இந்த நிகழ்ச்சியிலும் நிருபர்கள் திருமணம் பற்றி கேட்க, “ நான் பலமுறை இந்த கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டேன். என் வாழ்க்கையில் திருமணத்திற்கும், செக்ஸிற்கும் இடம் கிடையாது”. லைஃப் ஃபுல்லா இப்படியேதானா பாஸ்!


இயக்குநர் விஜய், அமலா பால் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்து, அதற்கான மனுவை கடந்த சனி அன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதில் முக்கிய செய்தி என்னவென்றால், அமலாபால் தனக்கு ஜீவானம்சம் தேவையில்லை என்பதையும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். பொதுவாக விவாகரத்து செய்யும்போது குறிப்பிட்ட தொகை ஜீவானம்சமாக கணவன் மனைவிக்கு தருவது வழக்கம். ஆனால் அமலா ஜீவானம்சத்தை எதிர்பார்க்கவில்லையாம்.


கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீவித்யா நடிப்பில் உருவாகிவரும் பிரம்மாண்ட படம் கஷ்மோரா. இப்படத்திற்கான படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில் இப்படத்தில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இந்த மாதத்தில் கஷ்மோரா படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று உறுதியளித்துள்ளார். அதுமட்டுமின்றி தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது படக்குழு


அமெரிக்காவின் பிரபல டிவி புகழ் கைலி ஜன்னர் (Kylie Jenner) பிறந்தநாளுக்கு கிடைத்திருக்கும் பரிசு 189,000 டாலர் மதிப்புள்ள பென்ஸ் கார். கைலியின் 19வது பிறந்தநாளுக்காக, அவரின் காதலனான ராப் சிங்கர் டைகாவின்(Tyga) காதல் பரிசு தான் இந்த கார். இணையத்தில் பதிவிட்டு மிரட்டிவருகிறார் கைலி ஜன்னர். இவரின் கடந்த பிறந்த நாளுக்கு 320,000 டாலர் மதிப்புள்ள 'பெர்ராரி' காரை பரிசளித்திருக்கிறார் டைகா. இப்போவே கண்ணக்கட்டுதே..!


ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் இரண்டாம் பாகமான 2.0 மீண்டும் மின்னல் வேகத்தில் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடந்துவருகிறது. மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று தற்பொழுது சென்னை திரும்பியுள்ளார் ரஜினி. 2.0 படப்பிடிப்பிற்கு ஆகஸ்ட் 22ம் தேதிக்கு மேல் ரஜினி கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது. சென்னை அயனாவரத்தில் நடக்கும் படப்பிடிப்பில் 100க்கும் மேற்பட்ட ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் தற்பொழுது நடித்துவருகின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க