ராதிகா 38, வருகிறது AYM மற்றும் இந்த வார ரிலீஸ் படங்கள்! #QuickSeven #க்விக்-செவன்

பூவரசம்பூ பூத்தாச்சி பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சி.... என்று “கிழக்கே போகும் ரயில்” படத்தின் மூலம் 1978ல் அறிமுகமானர் ராதிகா. அடுத்தடுத்து ஹிட் படங்களின் மூலம் முன்னணி நடிகையாக மாறியவர். இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். தவிர சித்தி, அரசி என்று ஹிட் சீரியல்கள். இன்று வரையிலும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கலக்கிவருகிறார். அவர் நடிப்புலகிற்கு வந்து 38 வருடங்கள் ஆகிவிட்டனவாம். அதை அவரின் மகள் ரேயான், தன்னுடைய ட்விட்டரில் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்திருக்கிறார். #WishesChithi!


சிம்பு வந்தாச்சி... படம் ரிலீஸாகப்போகுதே... கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடிக்கும் “அச்சம் என்பது மடமையடா” படத்தின் படப்பிடிப்பு பல சிக்கல்கள், பிரச்னைகளைத் தாண்டி இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. தள்ளிப்போகாதே பாடலுக்கான படப்பிடிப்பிற்கும் சிம்பு வருவதாக உறுதியளித்துவிட்டார். எனவே படம் வரும் செப்டம்பர் 9ம் தேதி ரிலீஸ்.  இன்றிலிருந்து ஒரே மாதத்தில் தமிழ், தெலுங்கில் படம் ரிலீஸ் என்று ட்விட்டரில் குறிப்பால் உணர்த்திவிட்டார் கெளதம் மேனன். #Varummmmm......


ஓங்கியடிச்சா இனி மூணு டன் வெயிட்டுடா... ஏன்னா இது சிங்கம் பார்ட் 3. ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் சிங்கம் படத்தின் ஷூட்டிங், படத்தைப் போல படப்பிடிப்பும் அசாத்திய வேகத்தில் நடந்துவருகிறதாம். படப்பிடிப்பு முடியும் முன்னரே படத்தின் வியாபாரம் 100 கோடியை தொட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தின் கேரள உரிமையை 5.3 கோடிக்கு சொப்னம் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. #Speed10gigabyte 


“விநாயகர் சதுர்த்தி தினம்” தனுஷுக்கும் விக்ரமிற்கும் ராசியான நாள் போலும். ஏனெனில் கடந்த ஆண்டு தனுஷ் தயாரித்த “நானும் ரவுடிதான்” படமும், விக்ரமின் “பத்து எண்றதுக்குள்ள” படமும் ரிலீஸானது. அதுபோல இந்தவருடம் தனுஷின் ”தொடரி”,விக்ரமின் “இருமுகன்” படங்கள் ரிலீஸாகவிருக்கிறது. இவ்விரு படங்களுமே தணிக்கையை முடித்து, செப்டம்பர் முதல்வாரமான  2ம் தேதி ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருக்கிறது. #MaariVsAnniyan


கார்த்தி நடிப்பில் கஷ்மோரா ரிலீஸூக்கு தயாராகிவருகிறது. இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் காற்றுவெளியிடை படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக சதுரங்கவேட்டை படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில், போலீஸாக   நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.ஏற்கெனவே சிறுத்தை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #CheetahKarthi!


லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் கால்ஷீட்டிற்காக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு காத்திருக்கின்றனர். ஆனால் இவரை ஹைதராபாத்திலுள்ள எந்த ஹோட்டலிலும் தங்குவதற்கு அனுமதிக்கமாட்டோம் என்று கூறிவருகிறார்கள் ஹோட்டல் நிர்வாகிகள். ஏனென்று விசாரித்தால், ஹோட்டலில் தங்கும்போது, திருப்தியாக இல்லையென்றால் கையில் கிடைப்பதையெல்லாம் எடுத்து போட்டு உடைக்கிறாராம் நயன்தாரா. அதிகமாக கோவப்பட்டுப் பேசுவதாகவும் புகார் கூறுவதாக சொல்லப்படுகிறது. காதுமா வாட் ஹாப்பண்ட்? #CoolBaby


இந்தவாரம் என்னனென்ன படங்கள் ரிலீஸ்ன்னு தெரியுமா? குக்கூ இயக்குநர் ராஜூமுருகனின் அரசியல் சாட்டையடி “ஜோக்கர்”, ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கத்தில் விக்ரம்பிரபுவின் காஷ்மீர் எல்லையில் போருக்குள் ஒரு காதலாய் “வாகா”, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில்  காமெடி சரவெடியாய் “முடிஞ்சா இவனபுடி” படங்கள் தமிழில் ரிலீஸ். இந்தியில், அக்‌ஷய்குமார், இலியானா நடிப்பில் க்ரைம் திரில்லராக “ரஸ்டோம்”, ரித்திக் ரோஷன் நடிப்பில் ஏ.ஆர்.ஆர் இசையில் காதல் நிறைக்கும் காவிய படம்“மொகஞ்ஜதரோ” படங்கள் ரிலீஸ். மலையாளத்தில் ஜெய்சூர்யா நடிப்பில் ப்ரீத்தம் என்ற காமெடி படமும் ரிலீஸ். தவிர, நயன்தாரா வெங்கடேஷ் நடிப்பில் தெலுங்கில் பாபுபங்காரம் என்றும் தமிழில் செல்வி என்ற பெயரிலும் ரிலீஸாகிறது. அதுனால சினிமா பிரியர்களே, இவ்ளோ படத்துல உங்க சாய்ஸ் என்னனு உடனே முடிவெடுத்து, டிக்கெட்ட புக் பண்ணுங்க பாஸ். #GetReadyFolks

Do you like the story?

Please Appreciate the Author by clapping!