தமிழில் வெளிவந்தது M.S.Dhoni Untold Story - Trailer

ஐந்து நாட்களுக்கு முன் ஹிந்தியில் வெளிவந்த M.S.Dhoni - The Untold Story படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றது.

பாலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட், டோலிவுட் என அனைத்து வட்டாரங்களிலும் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டது.

இது ஐந்து நாட்களில் 1 கோடிக்கு மேல் பார்வையாளர்களையும், 3 லட்சம் லைக்குகளையும் பெற்றது.ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்ற இப்படத்தின் டிரைலர், இப்போது
ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கினங்க தமிழில் இந்த படத்திற்கான டிரைலர் வெளியிடப்பட்டது.

வெளியிட்ட சில மணி நேரங்களிலே ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை பெற்று விட்டது.
இதில் டோனியின் சொல்லப்படாத வாழ்க்கை பக்கங்கள் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் டோனியின் ஒவ்வொரு அசைவையும் படத்தின் இயக்குநர் நீராஜ் பாண்டே அற்புதமாக காட்டியுள்ளார்.

இது டோனி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து கிரிக்கெட் பிரியர்களுக்கும் ஒர் விருந்தாக அமையும் என எதிர்பார்க்க படுகிறது.


ப. கார்த்திகேயன்
மாணவர் பத்திரிகையாளர்


''நம்ம தல தோனி'' முழு ஆடியோ தொகுப்பு #VikatanAudio


 


Do you like the story?

Please Appreciate the Author by clapping!