விஷாலுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஒரு வாரம் கெடு! (விஷாலின் பேட்டி இணைப்பு)

 

 

தயாரிப்பாளர் சங்கத்தினை அவமரியாதை செய்யும் வகையில் பேட்டி அளித்துள்ள நடிகர் விஷால் ஒரு வாரத்தில் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் கெடு விடுத்துள்ளது.

நடிகர் விஷால் அண்மையில் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் தயாரிப்பாளர் சங்கம் குறித்து அவமரியாதையாக பேசியதாக கூறி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில், விஷாலுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதில், ஆனந்த விகடன் வார இதழில் விஷால், தயாரிப்பாளர் சங்கத்தினை அவமரியாதை செய்யும் வகையில் பேட்டி அளித்துள்ளார். அதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மேலும், ஒரு வாரத்தில் விஷால் தனது பேட்டிக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் தீபாவளிக்கு வெளியிடுவதாக அறிவித்துள்ள ‘கத்திச்சண்டை’ திரைப்படம் தவிர்த்து அவர் நடிக்கும் எந்த படத்திற்கும் தயாரிப்பாளர் சங்கமும், தயாரிப்பாளர்களும் ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விஷால் அப்படி என்னதான் அந்தப் பேட்டியில் கூறியிருந்தார். விஷால் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியை படிக்க க்ளிக் செய்க...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!