‘‘6 லட்சம் போச்சே!’’: நடிகையிடம் கிரெடிட் கார்ட் தில்லாலங்கடி!

10,04,4647 Likes... 2,78,39,040 Talking about these...  - பாலிவுட் நடிகை நர்கீஸ் ஃபக்ரி, ‘Have a Pleasant day’ என்று சும்மானாச்சுக்கும் சோஷியல் மீடியாக்களில் தன் படத்தை அப்லோடினால் இப்படித்தான் லைக்குகள், கமென்ட்டுகள் வந்து கொட்டும். இன்று காலையிலும் அதேபோலவே எக்கச்சக்க லைக்குகளும், காட்டமான கமென்ட்டுகளும் ஃபேஸ்புக்கை அதிர வைத்தன. ஆனால், இது கொஞ்சம் சிக்கலான விஷயம்!

‘நான் இங்கு இருக்கும்போதே எனது கிரெடிட் கார்டை வைத்து சில திருட்டு ஆசாமிகள் 6 லட்சம் ரூபாயை அபேஸ் செய்திருக்கின்றனர். ரப்பிஷ் பீப்பிள்ஸ்’ என்று கோபமாக நக்ரீஸ் ஃபக்ரி ஒரு ஸ்டேட்மென்ட் விட, நெட்டிசன்களும் சிட்டிசன்களும் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ராக்ஸ்டார், மெட்ராஸ் கஃபே, அஸார் என்று நர்கீஸ் ஃபக்ரி படங்கள் அனைத்துமே செம ஹாட் அண்ட் ஹிட். ‘ஹவுஸ்ஃபுல் 3’ பட வெற்றியைக் கொண்டாடும் விதமாக அண்மையில் கிரீஸ், அமெரிக்கா, ஏதென்ஸ் என்று சுற்றுலா சென்று வந்து என்ஜாய் பண்ணிவிட்டு, தாயகம் திரும்பிய வேளையில் இப்படி ஒரு திடுக்கிடும் சம்பவம் நடந்திருக்கிறது நர்கீஸ் ஃபக்ரிக்கு. மும்பையில் ஹாயாக ஸ்விம் சூட்டில் நீந்திக் கொண்டிருந்தபோதுதான், அந்த மெசேஜ் பீப் சவுண்டு வந்தது. ‘தேங்க்ஸ் ஃபார் பேங்க்கிங் வித் அஸ். (9,062 டாலர்) 6 லட்ச ரூபாய் பணம் டிரான்ஸாக்ஷன் செய்ததற்கு நன்றி!’ என்று அந்த கிரெடிட் கார்ட் பேங்க் நிறுவனத்தில் இருந்து சந்தோஷமாக மெசேஜ் வர, திடுக்கிட்டு விட்டார் நர்கீஸ். உடனே மும்பை கமிஷனரைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொல்ல, வழக்கம்போல் இன்வெஸ்டிகேஷனில் இறங்கிவிட்டது காவல்துறை.

மும்பை ஜூஹூவைச் சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரி ­­ஒருவர், ‘‘நர்கீஸ் அவர்களுக்கு ஏற்பட்ட மோசடியைப் பார்க்கும்போது, இது சில ஆன்லைன் ஃப்ராடுகளின் தில்லாலங்கடி என்பது தெரிகிறது. கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் போன்ற கார்டுகளை க்ளோனிங் செய்து, அவர்களின் அக்கவுன்ட்டை ஹேக் செய்து இப்படிப்பட்ட திருட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நர்கீஸ், அமெரிக்கக் குடியுரிமை பெற்றிருப்பதாலும், அமெரிக்காவில் பணம் திருடு போயிருப்பதாலும் அவரின் அமெரிக்க வங்கிக் கணக்கைத் தெரிந்து கொண்ட சில அமெரிக்கர்கள்தான் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது தெரிகிறது. விரைவில் இந்தத் திருட்டைக் கண்டுபிடிப்போம்!’’ என்று 'ரமணா' போலீஸ் பாணியில் சபதம் விடுத்திருக்கிறார்.

சாதாரண மக்களையும் ‘கார்ட் நம்பர் சொல்லுங்க’ன்னு கேட்கற ஃபோன்கால்ஸ் ஜாஸ்தியாகிட்டே வருது ஆஃபீஸர்ஸ். அதையும் கொஞ்சம் என்னான்னு பாருங்க!

- தமிழ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!