Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2.0 ஃபர்ஸ்ட் லுக் எப்போது... கேமரா மியூசியம் எங்கிருக்கிறது? #க்விக்-செவன்-#QuickSeven

  குக்கூ படத்திற்குப் பிறகு இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் தற்பொழுது வெளியாகியிருக்கும் படம் ஜோக்கர். சமூகப் பிரச்னைகளையும், அரசியலில் நடக்கும் சுரண்டலையும் போகிறப்போக்கில் சொல்லிச்சென்றிருக்கும் இப்படத்திற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஜனநாதன், ரஞ்சித்தைத் தொடர்ந்து அரசியலை எளிதில் கையாண்டு படமாக்கியிருக்கும் இயக்குநர்கள் பட்டியலில் ராஜூமுருகன் இணைந்திருக்கிறார். இந்நிலையில் தனுஷ் ட்விட்டரில், “ இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என்று யாரை பாராட்டுவது என்றே தெரியவில்லை. கண்களில் கண்ணீர் மட்டுமே... தயவு செய்து பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். #Joker  


  பிரேமம் பட மேரியை நினைவிருக்கிறதா? இயக்குநர் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் படத்தில் நாயகியாக நடிக்கவிருக்கிறார் அனுபமா பரமேஷ்வரன். பிரேமம் படத்தைத் தொடர்ந்து மலையாளத்தில் இரண்டாவது படம். துல்கர் சல்மானுக்கு சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்தப் படம் கம்மடிப்பாடம். தற்பொழுது இயக்குநர் அமல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவருகிறார். அப்படம் முடிந்ததும் துல்கர் -அனுமபா படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது. #AllTheBest


  மணி செய்யோன் இயக்கத்தில் சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தினி, காளிவெங்கட் நடிப்பில் உருவாகிவரும் படம் “கட்டப்பாவ காணோம்”. “நாய்கள் ஜாக்கிரதை” படத்தில் நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது போலவே, இப்படத்தில் மீன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது.  காணாமல் போகும் வாஸ்துமீன், அதைத்தேடும் கதையே கட்டப்பாவ காணோம் என்று கூறப்படுகிறது.  அந்த மீனுக்கு விஜய்சேதுபதி டப்பிங் பேசியிருக்கிறார். முன்னணி நடிகர் டப்பிங் பேசியிருப்பதால் படத்திற்கான விளம்பரமும், எதிர்பார்ப்பும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. #FindingFish


  சபாஷ்நாயுடு படப்பிடிப்பின் போது கெளதமிக்கும் ஸ்ருதிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. அதற்கு ஸ்ருதிஹாசன் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. “ஸ்ருதிஹாசன் ஃபேஷன் கேர்ளாக நடித்திருக்கிறார். இதை மனதில்கொண்டு கெளதமி வாங்கிய சில ஆடைகள், தயாரிப்பாளர் தரப்பிலும், மற்ற கலை இயக்குநர்கள் தரப்பிலும் இன்னும் மேம்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று கூறப்பட்டது, உடனேயே வேறு ஆடைகள் மாற்றியமைக்கப்பட்டு வடிவமைக்கப்படது. இதனால் அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. அப்படி எந்த கருத்துவேறுபாடும் கிடையாது” என்று கூறியிருக்கிறார்கள். 


  இத்தனை கேமராக்களா என்று வியக்கும் வகையில் “கேமரா மியூசியம்”, சென்னை விஜிபி கிங்டம் வளாகத்தில் உருவாகிவருகிறது. பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் இந்த பிரம்மாண்ட கேமரா மியூஸியத்தை உருவாக்கிவருகிறார். இங்கே உலகின் அதி நீளமான மம்மோத் கேமரா முதல் 11 கிராம் எடையளவே கொண்ட சிறிய கேமராக்களும் அடங்கும். அதுமட்டுமின்றி 3டி, பிஸ்டல், வாக்கிங் ஸ்டிக் கேமரா என்று விதவிதாம கேமராக்களை காட்சிப்படுத்தவிருக்கிறார்கள். தவிர, வித்தியாசமான புகைப்படங்கள், கலை தொடர்பான சுவாரஸ்ய தகவல்கள் அடங்கிய புத்தகங்கள், ஆவணப் படங்கள் என்று வெரைட்டியாக மியூஸியத்தை உருவாக்கிவருகிறார்கள்.  உலக புகைப்பட தினத்தில் இந்த அருங்காட்சியகத்தை ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் திறந்து வைக்கிறார். கேமரா வரலாறுகள் குறித்த ஆவண குறும்படங்களை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார். இந்த கேமரா அருங்காட்சியகம் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்களுக்காக திறக்கப்பட்டிருக்கும். #JustAClickAway


               

  “முதல்முறையாக கிராமத்துக் கதையில் நடிக்கிறேன், விஜயலட்சுமி என்ற கதாப்பாத்திரத்தில் தைரியமான பொண்ணாக நடிக்கிறேன்” என்று கண்கள் விரிய சொல்கிறார் ப்ரியா ஆனந்த். ராஜதுரை இயக்கத்தில் கெளதம்கார்த்திக்குடன் இவர் நடித்துவரும் படம் முத்துராமலிங்கம். இந்தப் படத்திற்காக ப்ரியா ஆனந்த் சிலம்பம் கற்றுகொண்டிருக்கிறாராம். அதுமட்டுமின்றி பல தற்காப்புகலைகளையும் கற்றுவருகிறாராம். இந்த வருடமுடிவுக்குள் படம் வெளியாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #LongTimeNoSee


                                         

  ஷங்கர் இயக்கத்தில் ரஜினிநடிக்கும் 2.0 படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் நவம்பரில் ரிலீஸாகிறது என்பதை இப்படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனத்தின் கிரியேட்டிவ் ஹெட் மகாலிங்கம் ட்விட்டரில் உறுதிப்படுத்தியிருக்கிறார். இன்று ஷங்கர் பிறந்த நாள் ஸ்பெஷலாக இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தற்பொழுது அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக  பிரம்மாண்ட செட் தயாராகிவருகிறது, அந்த செட்டில் தான் ரஜினி நடிக்கவிருப்பதாகவும் தகவல்.  #HBDShankar

-  பி.எஸ்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்