சூர்யாவுடன் மோதும் கார்த்தி! #க்விக்-செவன்-#QuickSeven

 பாகுபலி கட்டப்பாவை நினைவுபடுத்தும் கெட்டப்பில்  இணையத்தை கலக்கிவருகிறது காஷ்மோரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தைத் தொடர்ந்து கோகுல் இயக்கத்தில், கார்த்தி, நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் பிரம்மாண்ட படம் “காஷ்மோரா”. இந்த படத்தில் கார்த்திக்கிற்கு மூன்று வேடங்கள். ஹிஸ்டாரிக்கல் ‘ராஜ்நாயக்’, ரியல் லைஃப் கேரக்டர் காஷ்மோரா மற்றும் நம்மை அதிரடிக்கும் இன்னொரு கெட்டபில் வருகிறாராம் கார்த்தி..  அண்ணன் சூர்யாவின் சிங்கம் 3 யுடன் மோதுவதற்கு தீபாவளிக்கு ரெடியாகிவருகிறது இந்த காஷ்மோரா.  #BigBrothers


 என்னது.. விஷாலுக்கும் வரலெட்சுமிக்கும் திருமணமா என்று அதிர்ச்சியில் இருக்கிறீர்களா? இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் வரு. சில நாட்களாகவே இருவருக்கும் திருமணமாகப் போகிறது என்று செய்திகள் பரவிவந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து முதல்முறையாக மனம்திறந்த வரலெட்சுமி, “ தற்பொழுது நான் யாரையும் திருமணம் செய்வதாக இல்லை, என்னுடைய வேலையை மட்டுமே விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார். #AllisWell


 எட்டு வருடங்கள் கழித்த, லெஜன்ட் இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் இன்று வெளியாகயிருக்கிறது “பின்னேயும்”. கேரளாவில் 70 திரையரங்கிலும், மற்றப் பகுதியில் 30 திரையரங்கிலும் ரிலீஸாகிறது. புருஷோத்தமன் என்ற கதாபாத்திரத்தில் திலிப்பும், அவரின் மனைவியாக காவ்யா மாதவன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். #WelcomeSir


 விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் நடிப்பில் உருவாகிவரும் படம் இருமுகன். ஆனந்த் ஷங்கர் இயக்கிவரும் இப்படத்திற்கான இறுதிகட்டபணிகள் முடிந்து செப்டம்பர் 2ம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் முடிவடையாத காரணத்தால் படத்தை செப்-8ம் தேதிக்கு மாற்றலாம் என்று படக்குழு தீர்மாணித்திருக்கிறது. இப்போதைக்கு செப் 2ம் தேதி சசிகுமாரின் கிடாரி ரிலீஸ் மட்டும் உறுதியாகியிருக்கிறது. தனுஷின் தொடரியும் ரிலீஸாகுமா என்பது இன்னும் தெரியவில்லை. #SoloSasikumar


 சசி இயக்கத்தில், விஜய்ஆண்டனி நடிப்பில் வெளியாகி வசூலில் வேட்டையாடிய படம் “பிச்சைக்காரன்’. பிறகு தெலுங்கில் டப்பாகி தமிழை விட தெலுங்கில் அதிக கலெக்‌ஷன்களை அள்ளியது. இனி இந்தியிலும் கலக்கபோகிறது. பிச்சைக்காரன் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய “ஃபாக்ஸ் ஸ்டார் இந்தியா” தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தைகள் நடத்திவருகிறது. விஜய் ஆண்டனியையே நடிக்கவைக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. தற்பொழுது “எமன்”, “சைத்தான்” படங்களில் பிஸியாக இருக்கிறார் விஜய் ஆண்டனி. #VictoryAntony


 ரெமோ படத்திற்குப் பிறகு, மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான நடிக நடிகைகள் தேர்வு தற்பொழுது நடந்துவருகிறது. முதல்கட்டமாக சதீஷ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இருவரும் இப்படத்தில் நடிக்கவிருப்பது உறுதியாகியிருக்கிறது. தவிர, நயன்தாரா மற்றும் பகத்பாசில் இருவரும் முக்கிய ரோலில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இசை, வேற யாரு? நம்ம அனிருத் தான்.  #BusyBoy


 “நீ ஹரியானாவின் சிங்கம் மட்டுமில்லாமல், இந்தியாவின் உயிர். ஆணுக்குப் பெண் குறைந்தவர் இல்லை என்பதை பதித்துவிட்டாய். நீ 4 பில்லியன் மக்களுக்கான முன்னுதாரணம்” என்று ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் வெண்கலம் வாங்கி தந்த சாக்‌ஷி மாலிக்கை புகழ்ந்து தள்ளுகிறார் அனுஷ்கா சர்மா. சுல்தான் படத்தில் ரீல் மல்யூத்த வீராங்கனையாக நடித்த அனுஷ்கா, ரியல் வீராங்கனைக்கு மரியாதை செய்யும் விதமாக பேசியது பாலிவுட்டில் இன்று வைரல். #ProudOfYouSakshi

பி.எஸ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!