Published:Updated:

காஜல் மேல் கடுப்பில் சிவா; இணையத்தில் வெளியான #thala57 படங்கள்! #க்விக்-செவன் #QuickSeven

Vikatan
காஜல் மேல் கடுப்பில் சிவா; இணையத்தில் வெளியான #thala57 படங்கள்!  #க்விக்-செவன் #QuickSeven
காஜல் மேல் கடுப்பில் சிவா; இணையத்தில் வெளியான #thala57 படங்கள்! #க்விக்-செவன் #QuickSeven

 “ரெமோ” படத்தைத் தொடர்ந்து மோகன் ராஜா படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். அந்த படத்திற்குப் பிறகு ரஜினிமுருகன் இயக்கிய பொன்ராமுடன் மீண்டும் கூட்டணி வைக்கிறார் சிவா. இந்தப் படத்திற்கு நாயகியாக சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அடுத்த வருடம் ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இசை இமான். #HatrickCombo

ஜீவன் நடிப்பில், சுசிகணேசன் இயக்கத்தில் 2006ல் ரிலீஸான படம் “திருட்டு பயலே”. இந்த திருட்டுப்பயலுக்கு ப்ரமோஷன் கிடைத்து  இரண்டாம் பாகம் உருவாகவிருக்கிறது. இதில் நாயகனாக பாபிசிம்ஹா, வில்லனாக பிரசன்னாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். முதல் பாகத்தில் ப்ளாக்மெயில் செய்துகொண்டிருக்கும் இந்த திருட்டுப்பையன், இரண்டாம் பாகத்தில் தொழில்நுட்பத்திருடனாக மாறப்போகிறானாம்.  #Mr.BlackMailer

தமிழ், தெலுங்கு, இந்தி என்று சுற்றிச்சுற்றி நடிப்பில் கிரண்டடித்துவரும் தமன்னாவின் நெக்ஸ்ட் டார்கெட் மலையாளம். இயக்குநர் ரத்தீஷ் அம்பாட் இயக்கும் “குமாரசம்பவம்” படத்தில் திலிப் மற்றும் சித்தார்த்துடன் நடிக்கவிருக்கிறார் தமன்னா. சித்தார்த், தமன்னா இருவருக்குமே, இது முதல் மலையாளப்படம். தமன்னா சொந்தக்குரலிலேயே டப்பிங் பேசவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. #MalluTammu

ஐரோப்பா நாடுகளில் அஜித்தின் 57வது படத்திற்கான படப்பிடிப்பு நடந்துவருகிறது. இந்தப் படத்தில் அஜித், சர்வதேச போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அஜித் நடிக்கும் படப்பிடிப்பு காட்சிகளை யாரோ திருட்டுத்தனமாக படமாகி இணையத்தில் வெளியிட்டதால் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறது படக்குழு. அதுமட்டுமின்றி, காஜல் அகர்வாலும் தன்னுடைய ட்விட்டரில் புகைப்படங்கள் பதிவேற்றியதால் கடுப்பில் இருக்கிறாராம் இயக்குநர் சிவா. இதேமாதிரிதான் மலேசியாவிலும் ஒரு முறை நடந்தது... கபாலிடா... இப்போ தல57டா... #NetizensDa

 உதயநிதி நடிப்பில் அகமது இயக்கத்தில் வெளியான மனிதன் படத்தின் ஒரிஜினல் இந்தி படமான ஜாலி எல்.எல்.பி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இப்படத்தில் நாயகனாக அக்‌ஷய் குமார் நடிக்கவிருக்கிறார்.  அக்‌ஷய் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஒரு நாளைக்கு ஒரு கோடி. இவருக்கான படப்பிடிப்பு மட்டும் 40-50 நாட்கள் இருந்தால் நீங்களே கணக்குப்போட்டுக்கோங்க பாஸ். #SingIsKinng

உலக சினிமா பிரியர்கள் நிறைய பேர் பிரமிக்கும் படம் பென்ஹர். இப்படத்தின் நவீன வடிவாக்கமாக இந்த வாரம் ரிலீஸாகியிருக்கிறது. படத்தில் ஆப்ரிக்கனாக பிரபல நடிகர் “மார்கன் ஃப்ரீமேன்” நடித்திருக்கிறார். நடிப்பிற்காக இணையத்தில் பாராட்டுகளை அள்ளிவருகிறார். ஆனால், படப்பிடிப்பின்போது, இவருக்கான ஸ்க்ரிப்ட் வரவில்லையாம். தாமதமாக கையில் வந்தாலும், 10 நிமிடத்திலேயே படித்துவிட்டு, படப்பிடிப்பில் மிரட்டியிருக்கிறார் மார்கன். லெஜன்ட்னா சும்மாவா....? #PerfectMan

 கரண்ஜோகர் இயக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்தப் படம் “ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்”, இதன் இரண்டாம் பாகம் உருவாகவிருக்கிறது. முதல் பாகத்தில், அலியாபட் நாயகியாக அறிமுகமானார். அதுபோல இரண்டாம் பாகத்தில் ஸ்ரீதேவியின் மகளான ஜானவி கபூரும், சய்ஃப் அலிகான் மகளான சாரா அலிகான், இருவரும் நாயகியாக அறிமுகமாகிறார்கள். மயிலு மகள் ட்ரெண்டி மயிலாக வருவாரென எதிர்பார்க்கலாம்!  #SequelSeason

-பி.எஸ்-

Vikatan