ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

என்னது! ரெமோ பெயர் மாற்றமா? - படக்குழு விளக்கம்!

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் ரெமோ வரும் அக்டோபர் 7ம் தேதி வெளியாகவிருக்கிறது.

சிவகார்த்திகேயன் இரு கேரக்டர்களில் நடிக்கிறார். இப்படத்திற்கு ரெமோ என்ற பெயரை ஏற்கெனவே படக்குழு அறிவித்திருந்தது. தற்பொழுது ரெமோவிற்கு “ரெங்கநாதன் என்கிற மோனகா”  என்ற விளக்கம், நேற்று முதல் இணையத்தில் பரவியது.

ஏனெனில் வரிவிலக்கு பெறுவதில் சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதற்காக வழக்கமாக சில படங்கள் கடைசி நேரத்தில் பெயர் மாற்றப்படும். அதுபோல ரெமோவிற்கும் பெயர் மாற்றுகிறார்கள் என்று சொல்கிறார்கள்.

இதுகுறித்து படக்குழுவில் விசாரித்தபோது, இந்த விளக்கத்தை திட்டவட்டமாக மறுத்திருக்கிறது. தவிர, ரெமோ என்பது பெயர்ச் சொல் தான். அதனால் எந்த பிரச்னையும் இல்லை என்பதையும் தெரிவித்துள்ளது.

பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, ஹாலிவுட் மேக்கப் கலைஞர் சீன் பூட், அனிருத் என்று பல முக்கிய தொழில்நுட்ப கலைஞர்கள் பங்குபெற பிரம்மாண்டாக 24AM ஸ்டூடியோஸ் சார்பில் ராஜா தயாரித்துவருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!