புகழுக்கும் பணிவுக்கும் இடையே புகழை தேர்வு செய்தேன் : கமல்

 

நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியர்’ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கமல்ஹாசனுக்கு, திரை உலகத்தினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
கமலை நேற்று ஸ்ருதிஹாசன், விஷால், சூர்யா, சிவக்குமார் நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். 
இந்தியாவைப் பொறுத்தவரையில் இதுவரையில் சில பிரபலங்கள், இந்த விருதைப் பெற்று இருக்கிறார்கள்
ஜே.ஆர்.டி.டாட்டா - 1983 (தொழில் துறை)
சத்யஜித்ரே - 1987 (சினிமா)
சிவாஜி கணேசன் - 1995 (சினிமா)
ஜூபின் மேத்தா - 2001
அமிதாப்பச்சன் - 2007(சினிமா)
ஐஸ்வர்யா ராய் - 2012(சினிமா)
ஷாரூக்கான் - 2014 (சினிமா)
யஸ்வந்த் சின்ஹா - 2015 (நிதி நிபுணத்துவம்)
ஆனால், சினிமா பிரபலங்கள் செவாலியர் விருது வாங்குவது மட்டும் தான் பிரபலமாக பேசப்படுகிறது. 
இது பற்றி தன் ட்விட்டர் தளத்தில் கருத்து தெரிவித்து இருக்கும் கமல், " இந்திய அறிஞர்களும், இந்த விருதைப் பெற்று இருக்கிறார்கள்.அனால், அவர்கள் இதை விளம்பரப்படுத்துவதில்லை. பணிவுக்கும், புகழுக்கும் இடையே , நான் சிறுபிள்ளைத்தனமாக புகழை தேர்வு செய்து இருக்கிறேன். என் நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி" என பெருந்தன்மையாக அறிவித்து இருக்கிறார். 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!