Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

அஜித்57 படப்பெயர் துருவனா? விஜய்60 ஃபர்ஸ்ட் லுக் எப்போது? #க்விக்-செவன் #QuickSeven

"தட்டத்தின் மறையத்து", "ஜாக்கப்பிண்டே ஸ்வர்கராஜ்யம்" என்று மாறுபட்ட கதைக்களத்துடன் படங்களை இயக்கிய “வினித் சீனிவாசன்” இனி தயாரிப்பாளராகவும் மாறுகிறார். வினித்தின் உதவி இயக்குநரான கணேஷ் ராஜ் இயக்குநராக அறிமுகமாக, ஆனந்தம் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்களே. கல்லூரியில் படிக்கும் நண்பர்களின் காதல், நட்பு, வாழ்க்கை என்று ஜாலிப் படமாக உருவாகிறது. இம்மலையளப்படத்திற்கான போஸ்டர்  ரிலீஸாகி வைரலாகியிருக்கிறது.  #Adipoli


விஜய், கீர்த்திசுரேஷ், சதீஷ், டேனியல் பாலாஜி, ஜெகபதிபாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கும் “விஜய் 60” படத்திற்கான படப்பிடிப்பு தீவிரமாக நடந்துவருகிறது. பரதன் இயக்கிவரும் இப்படத்திற்கான 75% படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையன்று படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் செய்யலாம் என்று முடிவெடுத்திருக்கிறது படக்குழு. #Thalapathy60


“உங்கள் அன்புப் புதல்வன் கார்த்தியை கடத்திவிட்டோம் ஐயா. தயவுசெய்து சூரிய உதயத்திற்கு முன் 1கோடி ரூபாய் தந்தால் விட்டுவிடுவோம் ஐயா, ஆமென்” என்று தொடங்குகிறது மாநகரம் பட டிரெய்லர்.  நயன்தாரா நடிப்பில் மாயா படத்தைத் தயாரித்த படக்குழுவின் அடுத்தப் படம். நான்கு கோணங்கள், மூன்று பிரச்னைகள், இரண்டு காதல்கள் இதுவே கதைக்களம். ரெஜினா, ஸ்ரீ நடித்திருக்கும் இப்படத்தின் டிரெய்லரே ஈர்ப்பு.  டிரெய்லர் இதோ, #AllTheBestTeam


சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் “அஜித் 57” படத்திற்கான பெயர் தேர்வில் மும்மரமாக இறங்கியிருக்கிறது படக்குழு. இப்படத்திற்கு “துருவன்” என்று பெயரிடலாம் என்று ஆலோசனையில் இருக்கிறார்களாம். இன்னும் பல பெயர்களையும் ஆலோசனையில் வைத்திருக்கிறது படக்குழு. அஜித்தின் ஃபேவரைட் அப்புக்குட்டி முக்கிய ரோலில் நடிக்கிறார். தவிர, அக்‌ஷரா ஹாசன், காஜல் அகர்வால் நாயகிகளாக நடித்துவருகிறார்கள். #AK57


படம் ரிலீஸாகும் அன்றே, திருட்டு டிவிடியும் வெளியாகிவிடுகிறது. அதற்கெதிரான புதுமுயற்சியை கையாளவிருக்கிறது ரெமோ டீம். பொதுவாக, வெளிநாடுகளில் வெளியாகி, அதற்கு அடுத்த நாள் தான் இந்தியாவில் எந்த தமிழ்ப்படமும் ரிலீஸாகும். இதனால் திருட்டு டிவிடி எளிதில் உருவாக வாய்ப்பிருப்பதால்,  முதலில் இந்தியாவில் ரிலிஸான பிறகே வெளிநாடுகளில் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. #KillPiracy


 “காக்காமுட்டை” படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் மணிகண்டன். அடுத்தடுத்து இரண்டு படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.  விதார்த் நடித்த “குற்றமே தண்டனை” மற்றும் விஜய்சேதுபதி நடிக்கும்”ஆண்டவன் கட்டளை”. இவ்விரு படங்களும் அடுத்தடுத்து ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் அடுத்தப் படத்திற்கு தயாராகிவிட்டார் மணிகண்டன்.  அடுத்தப் படத்தின் பெயர்  “கடைசி விவசாயி”. விவசாயி வாழ்க்கைப் பற்றியான கதை. இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் வயதானவர் யாரையாவது நடிக்கவைக்கலாம் என்பது திட்டமாம். இந்தவருட இறுதிக்குள் படப்பிடிப்புதொடங்கலாம் என்று சொல்லப்படுகிறது. #Bravo


பெங்காலி இயக்குநர் Aniruddha Roy இயக்கத்தில் அமிதாப், டாப்ஸி நடிக்கும் இந்திப் படம் “பிங்க்”. ஓர் இரவில் ஏற்படும் எதிர்பாராத சம்பவங்களும், அதில் பாதிக்கப்படும் டாப்ஸியும் அவரின் இரண்டு தோழிகளுமே முக்கிய கதாப்பாத்திரங்கள். அந்த பிரச்னையில் டாப்ஸிக்கு ஆதரவாக வாதாடும் வக்கீலாக அமிதாப் நடித்திருக்கிறார். இப்படத்தில் அமிதாப் பைபோலார் டிஸ் ஆர்டர் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பார். வலியும், உணர்வுமாக பயணப்படும் இப்படத்திற்கான டிரெய்லர் வெளியாகி தெறி ஹிட். தற்பொழுது ஓர் பாடல் ஒன்றையும் வெளியிடப்பட்டுள்ளது . ஒவ்வொரு வீடியோ ரிலீஸாகும் போதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டிவருகிறது பிங்க். செப்டம்பர் 16 படம் ரிலீஸ்.

-பி.எஸ்-

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement