இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்? மினி டிரெய்லர்! #MovieThisWeek | This Friday Release Movie Lists

வெளியிடப்பட்ட நேரம்: 19:07 (24/08/2016)

கடைசி தொடர்பு:19:24 (24/08/2016)

இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்? மினி டிரெய்லர்! #MovieThisWeek

இந்த வாரம் வெளியாக இருக்கும் படங்கள் பற்றி சின்ன ட்ரெய்லர் இதோ...

Release date: 25th Sep 

பீட்சா:

இந்த லிஸ்ட்டில் பீட்சாவா என ஆச்சர்யப்பட வேண்டாம். ஃபீனிக்ஸ் மாலில் இருக்கும் ஜாஸ் சினிமாசில் வாராவாரம் வியாழக்கிழமை 'ப்ளே பேக்' என்ற பெயரில் முன்பு வெளியான ஒரு படம் திரையிடப்படுகிறது. இந்த வாரம் கார்த்திக் சுப்புராஜ் 'பீட்சா' மாலை 6.30 மணிக்குத் திரையாகிறது. படத்தை தியேட்டரில் மிஸ் செய்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Mechanic: Resurrection  

1972ல் சார்லஸ் ப்ரோன்சன் நடிப்பில் மைகேல் வின்னர் இயக்கி வெளியான 'தி மெக்கானிக்'. இதன் ரீமேக்காக சைமன் வெஸ்ட் இயக்கத்தில் அதே பெயரில் 2011ல் வெளியானது 'தி மெக்கானிக்'. ஹீரோவாக ஜேசன் ஸ்டாதாம் நடித்திருந்தார். இப்போது வெளியாகும் 'மெக்கானிக்: ரெசுரக்‌ஷன்' படம் 'தி மெக்கானிக்கின் சீக்குவலாக வெளியாகிறது. இந்த பாகத்தில் ஜேசனின் காதலியான ஜெஸ்ஸிகா ஆல்ஃபாவை கடத்தி வைத்து ஜேசனை வைத்து சில கொலைகளை நிகழ்த்துகிறார்கள் எதிரிகள். அவர்களிடமிருந்து காதலியை ஜேசன் எப்படி மீட்கிறார் என்பது தான் கதை. 

A Flying Jatt: 

'F.A.L.T.U', 'ABCD', 'ABCD 2' படங்களை இயக்கிய ரெமோ டிசோசா இயக்கத்தில் டைகர் ஷராஃப், ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் நடித்திருக்கும் படம் 'எ ஃப்ளையிங் ஜாட்'. 'க்ரிஷ்' போல இதுவும் ஒரு சூப்பர் ஹீரோ படம் தான். சூப்பர் ஹீரோ படங்களுக்கே உரிய ஸ்டீரியோ டைப் கதை தான் "சூப்பர் வில்லனை அழித்து உலகத்தைக் காப்பாற்றும் சூப்பர் ஹீரோ ப்ளையிங் ஜாட்" தான் ஒன் லைன். படம் எப்படி எனப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 


Release date: 26th Sep

மீண்டும் ஒரு காதல் கதை:

மலையாளத்தில் வெளியாகி நிவின் பாலிக்கும், இயக்குநராக வினித் சீனிவாசனுக்கும் பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த படம் 'தட்டத்தின் மறையத்து'. இதன் தமிழ் ரீமேக் தான் 'மீண்டும் ஒரு காதல் கதை'. இந்து பையன் முஸ்லீம் பெண்ணைக் காதலித்து அதில் வரும் பிரச்சனைகளைத் தாண்டி எப்படி சேர்கிறார்கள் என்பதே கதை.
நிவின் பாலி ரோலில் வால்டர் பிலிப்ஸ், இஷா தல்வார் நடித்த ரோலில் அவரே நடிக்கிறார். யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற ரீமேக்குகளை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கியிருக்கிறார். படத்தின் பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷும், பின்னணிக்கு ஷான் ரஹ்மானும்  இசையமைத்திருக்கிறார்.

எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது: 

49 ஓ படத்திற்குப் பிறகு கவுண்டமணி நடிப்பில் வெளிவரவிருக்கும் படம். இயக்குநர் சுசீந்திரனின் உதவி இயக்குநர் கணபதி பாலமுருகன் இயக்கியிருக்கிறார். மறுபடி கவுண்டமணியைத் திரையில் பார்க்கும் அனுபவத்துக்காக இந்தப் படம் அதிகம் கவனம் பெறும் இடத்தில் இருக்கிறது. 

Nine Lives: 

டாம் பிராண்ட் (கெவின் ஸ்பேசி) ஒரு பிஸியான பிஸ்னஸ்மேன். பரபப்பான வேலையால் குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்காதவராக இருக்கிறார். தன் மகளின் பிறந்த நாளுக்காக விசித்திரமான பெட் ஷாப்புக்கு சென்று பூனையை வாங்குகிறார். செல்லும் வழியில் ஒரு விபத்தில் சிக்குகிறார். விழித்துப் பார்க்கையில் தான் பூனையின் உடலுக்குள் இருப்பதை தெரிந்து அதிர்ச்சியாகிறார். ஒரு வாரத்துக்குள் உன்னுடைய குடும்பத்தினர் உன்னை அடையாளம் கண்டுபிடிக்கவில்லை என்றால் வாழ்நாள் முழுவதும் பூனையின் உடலில் தான் இருப்பாய் என கூறிவிடுகிறார் அந்த பெட்ஷாப் உரிமையாளர். இதைத் தொடந்து நடக்கும் கலட்டாக்கள் தான் மீதிப் படம். 'மென் இன் ப்ளாக்' சீரிசை இயக்கிய பேரி செனான்ஃபீல்டு இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்