தனுஷ், சிம்பு படங்கள் தள்ளிப்போக காரணம் என்ன, எப்போ ரிலீஸ்? #க்விக்-செவன் #QuickSeven

 கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் "அச்சம் என்பது மடமையடா" செப்டம்பர் 9ம் தேதி ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்டோபருக்கு படம் தள்ளிச்சென்றிருக்கிறது. காரணம், தெலுங்கு வெர்ஷனில் நடித்த நாகசைதன்யாவின் மற்றொரு படமான பிரேமம் ரிலீஸாவதால், இப்படத்தைத் தள்ளிவைக்கலாம் என்று படக்குழு முடிவெடுத்திருக்கிறது. அதுமட்டுமின்றி தமிழுக்கான  தள்ளிப்போகாதே பாடல்  படப்பிடிப்பு, பாக்கியிருப்பதால் அக்டோபரில் ரிலீஸ் தான் பெஸ்ட் என முடிவெடுத்திருக்கிறார்கள். #WeAreWaiting


 கபாலி ரிலீஸூக்கு முன்னரே வெளியாகவேண்டிய தனுஷின் படம் தொடரி. நீண்ட நாட்களாக தள்ளிச்சென்று வரும் தொடரி செப்டம்பர் 16ல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. செப்டம்பர் முதல் வாரத்தில் சென்சார். தவிர, இப்படத்திற்கான விநியோகஸ்த நிறுவனம் சாய் வி.கிரியேஷன்ஸ், வியாபார வேலைகளிலும் பிஸியாகிவிட்டதாம். தொடர்ந்து தனுஷின் கொடி தீபாவளி ரிலீஸ். #D27


 விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் நடிப்பில் ஆனந்த்சங்கர் இயக்கிவரும் த்ரில்லர் படம் இருமுகன். இந்த வாரத்தில் சென்சாருக்குச் செல்கிறது. அதற்கான முதல் பிரதி தயாரிக்கும் வேலை நடந்துவருகிறதாம். சென்சார் முடிந்துவிட்டால், செப்டம்பர் 8ம் தேதி படம் ரிலீஸாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சென்சார் முடிந்ததும் ஆனந்த் சங்கர் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. #Helena


 கபாலி படத்தில் இடம்பெறாத புதிய பாடல் ஒன்றை திங்க் மியூஸிக் இன்று இணையத்தில் வெளியிட்டுள்ளது. “தூண்டில் மீன்” என்று தொடங்கும் இப்பாடலை கபிலன் எழுதியிருக்கிறார். பிரதீப்குமார், கல்யாணி, தீ மூவரும் பாடியிருக்கிறார்கள். வானம் பார்த்தேன் பாடலின் நீட்சியாகவே இசை செவிகளில் விழுகிறது. மீண்டும் ஒரு இசை ட்ரீட் இந்த தூண்டில் மீன். #KalakkalKabali


 மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கவிருக்கும் “தி கிரேட் பாதர்” என்ற படத்தில் கொடூர வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஆர்யா. அப்படத்தில் நாயகியாக சினேகா நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்படத்தை ஹனீப் அதோனி இயக்கவுள்ளார். தமிழில் ஹீரோ, ஆனால் மற்ற மொழிகளில் வில்லனாக நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறாராம் ஆர்யா. ஏனென்றால், 2010ல் அல்லு அர்ஜூன் நடித்த வருடு என்ற தெலுங்கு படத்திலும் ஆர்யா தான் வில்லன். #AwesomeArya


 ஹீரோவாக நடிப்பதில் பலனில்லை என்று, மீண்டும் காமெடியனாக களம் இறங்கி, விஷாலுடன் கத்திச்சண்டை படத்தில் நடித்துவருகிறார் வடிவேலு. மீண்டும் ஹீரோவாக, ஆனால் வேற லெவலில் நடிக்கப்போகிறார். “இம்சை அரசன் 23ம் புலிகேசி” இரண்டாம் பாகத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் தொடங்கிவிட்டனவாம். இப்படத்தை லைக்கா புரடெக்‌ஷனும், ஷங்கரும் இணைந்து தயாரிக்கலாம் என்று கூறப்படுகிறது. வடிவேலுவின் காமெடி ராஜ்ஜியம் ஆரம்பம்! #WemissYou


 பாஜிராவ் மஸ்தானி படத்தை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி இயக்கவிருக்கும் அடுத்தப் படம் பத்மாவதி. இப்படமும் சரித்திரப் படமாகவே உருவாகவிருக்கிறது. வடஇந்தியாவில் முகலாயா பேரரசில் சித்தூரின் ராணியாக இருந்த ராணி பத்மாவதியின் வாழ்க்கை வரலாறு தான் படமாகவிருக்கிறதாம். தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் இருவருமே மீண்டும் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். தவிர, சாஹித் கபூர், தீபிகாவிற்கு கணவராக இப்படத்தில் நடிக்கவிருக்கிறாராம். பத்மாவதியின் எதிரியான சுல்தான் அலாவுதீன் காஜி கதாபாத்திரத்தில் ரன்வீர் நடிக்கிறார். இந்தப் படத்திற்கான ஒவ்வொரு காட்சியையும் ஆராய்ச்சி செய்து செதுக்கிக்கொண்டிருக்கிறாராம் இயக்குநர்.  #Perfectionist

Do you like the story?

Please Appreciate the Author by clapping!