கேப்டன்...விஜய்...அஜித்... இவர்களுக்குள் என்ன ஒற்றுமை? #QuickSeven | Quick seven today cinema news updates 25-08-2016

வெளியிடப்பட்ட நேரம்: 18:51 (25/08/2016)

கடைசி தொடர்பு:19:25 (25/08/2016)

கேப்டன்...விஜய்...அஜித்... இவர்களுக்குள் என்ன ஒற்றுமை? #QuickSeven

அமெரிக்க பத்திரிகையான ஃபோர்ப்ஸ், அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் (2016) பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 10வது இடத்தைப் பிடித்திருக்கிறார் தீபிகா படுகோனே. 10 இடத்துக்குள் வந்த முதல் இந்திய நடிகை இவர். ஒரு வருடத்திற்கு 67.70 கோடி சம்பளம் பெறுகிறார் தீபிகா.  அதிக சம்பளம் பெறும் நடிகைகள் பட்டியலில் இரண்டாவது முறையாக முதலிடம் பிடித்திருக்கிறார் ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் லாரன்ஸ். அவரின் சம்பளம் 308 கோடியாம். #BravoGirls


எழில் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. எழிலின் ஆஸ்தான நடிகர் சூரி மற்றும் நாயகிகளாக ரெஜினா, சிருஷ்டி டாங்கே  நடிக்கிறார்கள். இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை காரைக்கால் சுற்றியுள்ள கிராமங்களில் நடத்த திட்டமாம். கிருஸ்துமஸ்  தினமான டிசம்பர் 25ல் படம் ரிலீஸ். #ComedyCombo


“கொலைகார வீடியோ ஒன்று, அதைப் பார்த்த ஏழாவது நாளில் பார்த்தவர் மரணம்”... இதுதான் ஹாலிவுட் படமான ரிங்ஸ். ஜப்பானிய படத்தை அடிப்படையாக கொண்டு, 2002 மற்றும் 2005ல் வெளியான ரிங்ஸ் படங்கள் வரிசையில் மூன்றாவது பாகம், அக்டோபர் 28ல் ரிலீஸாகிறது . உச்சகட்ட த்ரில்லர் கம் பேய்படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் டிரெய்லர் ரிலீஸாகி படு வைரல். உங்களுக்கு பயப்பட பிடிக்குமா? நிச்சயம் இந்தப் படம் உங்களை அச்சுறுத்தும். #RingsFear


 த்ரிஷ்யம், அதன் தமிழ் ரீமேக்கான பாபநாசம் உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கியவர் ஜீத்து ஜோசப், மலையாளத்தின் சக்ஸஸ் ஃபுல் இயக்குநராக மாறிவிட்டார். இவரின் அடுத்தப் படத்தின் ஹீரோ மம்முட்டி. நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். த்ரிஷ்யம் படத்திற்கு முதலில் மம்முட்டி தான் நடிக்க வைக்கலாம் என்று நினைத்திருந்தாராம் ஜீத்து. #Mammooka


கன்னடத்தில் வெளியான த்ரில்லர் படமான யூ டர்ன்னில் நடித்த ஷ்ரதா (Shraddha), கெளதம் கார்த்திக் நடிக்கும் படத்தில் நாயகியாகவிருக்கிறாராம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஆர்.கண்ணன் இயக்குகிறார். செப்டம்பர் முதல் வாரம் படப்பிடிப்பு தொடங்கலாம் என்று கூறப்படுகிறது. செப்டம்பர் 12ம் தேதி ஷ்ரதா படப்பிடிப்பில் கலந்துகொள்வாராம். #WelcomeBaby 


தமிழில் வெளியாகி மெகா ஹிட்டடித்த தனிஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக் தான் துருவா. ராம்சரண், ரகுல் ப்ரீத் சிங் நடிக்கும் இப்படம் பற்றித்தான் தெலுங்கு திரையுலகம் முழுவதும் ஒரே பேச்சு. அரவிந்த் சாமி தான் தெலுங்கிலும் வில்லன். பவன்கல்யாண் பிறந்த நாளான செப்டம்பர் 2ம் தேதி பாடல்கள் வெளியிட திட்டம். தொடர்ந்து அக்டோபர் 7ம் தேதி படம் ரிலீஸ். #DhruvaOruvan


 விஜய், அஜித் மற்றும் விஜயகாந்த் மூவரும் தான் இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங் ஹீரோக்கள். விஜய்காந்த் பிறந்த தினம் மற்றும் விஜய் திருமண நாள் இன்று என்பதால் ட்விட்டரில் இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்தன. தவிர, அஜித்57 படத்திற்கான படப்பிடிப்பு புகைப்படமும் ட்விட்டரில் ட்ரெண்ட். #HBDCaptain , #Ilayathalapathy And #Thala57. 

-பி.எஸ்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்