விஜய் சேதுபதி படம் 600 அரங்குகளில் வெளியாகிறதா...! #QuickSeven

 விஷால் - மிஷ்கின் இணையும் ’துப்பறிவாளன்’  படத்திற்கான பூஜை மார்ச் மாதமே நடந்தது. அந்த நேரத்தில் விஷால் கத்திச் சண்டை படத்திற்கு தேதி ஒதுக்கியிருந்தார். அப்படத்திற்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. செப்டம்பர் 12ம் தேதி முதல் மிஷ்கினின் துப்பறிவாளன் படத்திற்கான படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறார் விஷால். #GoodCombo


 போதுமானளவிற்கு வசூலுடன் தர்மதுரை திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய்சேதுபதியின் அடுத்தப் படமான றெக்க, ரிலீஸூக்கு ரெடி. கும்பகோணத்து சமத்துப் பையனாக விஜய்சேதுபதியும், மதுரை பொண்ணாக லட்சுமிமேனனும் நடிக்கும் இப்படம் ஆயுதபூஜையன்று ரிலீஸ். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் சிவபாலன் பிக்ஸர்ஸ், தமிழகத்தில் 600 திரையரங்குகளில் வெளியிட திட்டம். #Bigleap


 24 ஏஎம் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் முதல் தயாரிப்பு ‘ரெமோ’. அக்டோபர் 17ல் ரிலீஸாகவிருக்கும் இப்படத்தின் டீஸர் மற்றும் சிங்கிள் பாடல்கள் இணையத்தில் மாஸ் ஹிட். சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் நடிப்பதால் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. இந்நிலையில், செம்டம்பர் 5ம் தேதி பாடல்களை வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறது. தவிர, தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவுக்கு ரெமோ பிடித்துவிட்டதாம். இயக்குநர் பாக்யராஜின் அடுத்தப் படத்தையும் தானே தயாரிக்கவும் முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. #RockingRemo


 தெலுங்கிலும், மலையாளத்திலும் எதிர்பார்க்கப்படும் படம் “ஜனதா கேரேஜ்”.  மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்திருப்பதே காரணம். இப்படம் செப்டம்பர் 1ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. கேரளாவில் வெளியிடும் உரிமையை மோகன்லால் தான் வாங்கியிருக்கிறார். கேரளாவில் மட்டும் 200 திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறதாம். தமிழில் ஒரு ஜில்லா.. தெலுங்கில் ஜனதா... #AllThebestLalCheta 


  ஆகஸ்ட் 29ம் தேதி விஷால் பிறந்த நாள். அன்றைய தினம் சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு  நடிக்கும் கத்திச்சண்டை படத்தின் சிங்கிள் வெளியாகவிருக்கிறது. ”நான் கொஞ்சம் கருப்பு தான்” என்று தொடங்கும் பாடலுக்கு இசை ஹிப்ஹாப் ஆதி . ஆம்பள, கதகளி படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஷால் படத்திற்கு இசையமைக்கிறார் ஆதி.  இப்படத்திற்கு இன்னும் இரண்டு பாடல்கள் மட்டும் படப்பிடிப்பு பாக்கியிருக்கிறதாம். #HiphopVishal


 நில் பட்டே சனாட்டா படத்தை இயக்கியவர் அஸ்வினி ஐயர். அதாங்க.. தமிழில் அம்மா கணக்கு! அடுத்தப்படியாக “பார்லி கி பார்பி” என்ற படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தில் கிருத்தி சனோன், ஆயுஷ்மான் குரானா, ராஜ்குமார் ராவ் ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள். அக்டோபர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. முந்தைய படத்தைப் போலவே இந்தப் படமும் யதார்த்த சினிமா தானாம். #BeReadyDhanush 


(இந்த ரெண்டு படத்துக்கும் விமர்சனம் படிக்கணுமா? படத்தின் மேல் க்ளிக்குக!)

 அவ்வளவு தாங்க.. எழாவதா நியூஸ் எதுவும் சொல்லப்போறது இல்லை. இன்றைக்கு என்ன நாள். வெள்ளிக்கிழமை... புதுப்படம் ரிலீஸாகும் நாள். நாங்களே “மீண்டும் ஒரு காதல் கதை” மற்றும் ஹாலிவுட் படமான “மெக்கானிக் ரிசரெக்ஷன்”  படத்திற்கான விமர்சனம் எழுதிருக்கோம்.. விமர்சனம் படிங்க.... படம் பாருங்க... எஞ்சாய் பண்ணுங்க.... ஹாப்பி வீக் எண்ட்! 

-பி.எஸ்-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!