ஓடத் தயாராகி விட்டேன்- கமல்ஹாசன்

கமல்ஹாசன் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உருவாகிவரும் படம் "சபாஷ் நாயுடு". இப்படத்திற்கான பாதி படப்பிடிப்பு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்தது. அடுத்தக் கட்டப் படப்பிடிப்புக்கான ஆயத்தங்கள் சென்னையில் தொடங்கிய தருணத்தில் கமலுக்கு எற்பட்ட விபத்தினால் படப்பிடிப்பு ரத்தானது. 

அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, கமல்ஹாசன் தொடர் ஓய்வில் இருந்தார். தற்பொழுது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், படப்பிடிப்பிற்கு ரெடியாகிவிட்டார் கமல். 

கமல் ட்விட்டரில், “ சபாஷ்நாயுடு படத்தின் படப்பிடிப்பிற்கு ஆயத்தமாக, ஸ்கிரிப்ட் வேலைகளைத் தொடங்கிவிட்டேன். பணிகள் நிமித்தமாக ஓடத் தயாராகி விட்டேன். மனம் உயரே பறக்கத்தொடங்கிவிட்டது. கால் தவறி விழுந்துவிட்டேன் என்று சொல்லிவிடமுடியாது. இன்னொரு தருணத்தில் அந்தக் கதையை உங்களுடன் பகிர்கிறேன். மருத்துவர்களுக்கும், என்னுடைய நலன் விரும்பிகளுக்கும் என் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார். 

ஸ்ருதி, பிரம்மானந்தம், செளரப் சுக்லா மற்றும் ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் சபாஷ் நாயுடு  படத்தில் நடிக்கிறார்கள். அடுத்த மாதம் கொச்சியில் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. 

பி.எஸ்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!