மீண்டும் இணைகிறது பா.ரஞ்சித்-ரஜினி கூட்டணி | Rajini Ranjith combo back

வெளியிடப்பட்ட நேரம்: 23:39 (29/08/2016)

கடைசி தொடர்பு:08:18 (30/08/2016)

மீண்டும் இணைகிறது பா.ரஞ்சித்-ரஜினி கூட்டணி

கடந்த மாதம் பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடித்து வெளியான கபாலி திரைப்படம் மெகா ஹிட் அடித்தது. தற்போது ரஜினி லைக்கா நிறுவனம் சார்பில் ஷங்கரின் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வரும் எந்திரன் 2.0 படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.எமி ஜாக்சன் , பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் போன்ற முன்னணி பிரபலங்கள் அந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள்.

இயக்குனர் பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.மீண்டும் ரஜினியை வைத்தே ஒரு படம் இயக்குவார் என கபாலி பட தயாரிப்பாளர் தாணு ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.விஜய் படத்தை இயக்குவதாகவும் இருந்தது. அதுபற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், நடிகர் தனுஷ் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 

எந்திரன் 2.0 படத்திற்குப் பின், ரஜினி மீண்டும் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிப்பார் என தெரிவித்து இருக்கிறார். அதை தனுஷின் வொண்டர்பார் பட நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தனது சமூக வலைதளம் வாயிலாக கூறி இருக்கிறார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்