வெளியிடப்பட்ட நேரம்: 16:48 (30/08/2016)

கடைசி தொடர்பு:18:35 (30/08/2016)

அனுஷ்காவிற்கு உதவிய ஆர்யா! சினிமா நிஜமானது

அனுஷ்கா, ஆர்யா நடிப்பில் வெளியான படம் "இஞ்சி இடுப்பழகி". தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸான இப்படத்திற்காக உடல் எடையை அதிகரித்தார் அனுஷ்கா.

இஞ்சி இடுப்பழகி படத்திற்காக பெரும் பாராட்டுகளையும் பெற்றார். தற்பொழுது அந்த உடல் எடையை குறைக்கமுடியாமல் அவதிப்பட்டுவருகிறாராம். அடுத்த கட்டமாக, “பாகுபலி;தி கன்க்ளூஷன்” படத்திற்கான படப்பிடிப்பில் கலந்துகொள்ளவேண்டும். பாகுபலியில் ராணியான தேவசேனா கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிப்பதால், ராணிக்கான ஃபிட்டான உடல் எடைவேண்டும் என்று ராஜமெளலி எதிர்பார்க்கிறாராம். 

பாகுபலி படத்திற்காக இன்னும் 15 கிலோ வரை உடல் எடையை அனுஷ்கா குறைத்தாகவேண்டும் என்று சொல்லப்படுகிறது. அதற்கான தீவிர உடல் பயிற்சியில் இருக்கிறார் அனுஷ்கா. 

இதற்காக அனுஷ்காவின் நெருங்கிய நண்பரான ஆர்யாவும் உடல் எடை குறைப்பு சார்ந்த பல டிப்ஸ்களையும் கொடுத்திருக்கிறாராம். இதன்படி, ஹைதராபாத் புறநகர் பகுதிகளில் தினமும் சைக்கிள் பயிற்சியையும் எடுத்துவருகிறார் அனுஷ்கா. இஞ்சி இடுப்பழகி படத்திலும் அனுஷ்காவிற்கு உடல் எடையைக் குறைக்க ஆர்யா உதவி செய்வார். அந்த காட்சிகள் இப்பொழுது நிஜமாகியிருப்பதாக கோலிவுட் வட்டாரம் பேசி வருகிறது.  

இதற்கு நடுவே, தமன்னாவிற்கான காட்சிகளைப் படத்தில் அதிகரித்து, அனுஷ்காவிற்கான காட்சிகளை இயக்குநர்  ராஜமெளலி குறைத்துவிட்டார் என்று செய்திகள் பரவியது. அதை படக்குழு மறுத்திருக்கிறது. 

அனுஷ்கா உடல் எடை குறைத்த பிறகே படப்பிடிப்பு என்றும், அவருக்கான காட்சிகள் அனைத்தும் படக்குழு அவரை வைத்தே விரைவில் படமாக்கும் என்றும் கூறுகிறார்கள். 

குட் லக் தேவசேனா...!

-பி.எஸ்-

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்