வெளியிடப்பட்ட நேரம்: 18:08 (30/08/2016)

கடைசி தொடர்பு:19:54 (30/08/2016)

சரி சரி கண்ணை துடைச்சுக்குங்க பிரேமம் லவ்வர்ஸ்! #Premam

டிவிட்டர், பேஸ்புக் என தமிழர்களின் டைம்லைன் முழுக்க கண்ணீரும் கம்பலையுமாய் திரிகிறார்கள் மலையாள பிரேமம் ரசிகர்கள். நியாயமாய் கோபப்பட்டு பொங்க வேண்டிய மல்லு ப்ரதர்ஸ் சாஸ்திரத்துக்கு ரெண்டு மீம் போட்டு 'புட்டு கடலைக்கறி' என செட்டிலாகிவிட்டார்கள் ஆனால் தமிழ் ரசிகர்கள்தான் " எண்டே மலரு குட்டி" என தேம்பிக்கொண்டே ஸ்ருதியை பார்த்து நெட்டி முறிக்கிறார்கள். 

நேற்று மாலை பிரேமம் படத்தின் புகழ் பெற்ற 'மலரே' பாடலின் தெலுங்கு ரீமேக் வீடியோ வெளியானது. அந்த பாடலை 'எவரே' என்று தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஆடியோவாக வெளியான போதுகூட பெரிதாக யாரும் கலாய்க்காத நிலையில், இந்த விடீயோவை பார்த்து அதில் நடித்திருக்கும் நாக சைதன்யா - ஸ்ருதியுடன் ஒரிஜினல் வெர்சனில் இருக்கும் நிவின் பாலி - சாய் பல்லவியை ஒப்பிட்டு மீம்களும் டிவிட்களுமாய் கிரியேட் செய்து வைரலாக்கி வருகின்றனர். தொடர்ந்து தன்னை கலாய்க்கும் நபர்களை ஸ்ருதிஹாசனும் ப்ளாக் செய்து வருகிறார். உண்மையில் படம் தெலுங்கிலும் நன்றாக வந்திருப்பதாக தகவல்கள் வெளியானாலும் பழைய 'பிரேமம்' ரசிகர்கள் பாயை பிறாண்டுவதை நிறுத்திய பாடில்லை. சரி சரி கண்ணை துடைச்சுக்குங்க..தமிழ் ரீமேக்கில் மலர் டீச்சராக லட்சுமி மேனனாம். 

தெறிக்கும் ட்ரோல் மீம் மற்றும் ட்விட்களின் சாம்பிள்கள்...



 





 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்