ஜாக்கியின் படத்தை ரஜினி பார்ப்பாரா? இந்தியில் விலைபோன சிங்கம் 3! #QuickSeven | Quick seven today cinema news updates 30-08-2016

வெளியிடப்பட்ட நேரம்: 18:47 (30/08/2016)

கடைசி தொடர்பு:19:53 (30/08/2016)

ஜாக்கியின் படத்தை ரஜினி பார்ப்பாரா? இந்தியில் விலைபோன சிங்கம் 3! #QuickSeven

 

ஜாக்கிசான் நடிப்பில் சமீபத்தில் சீனாவில் வெளியாகி ஹிட் அடித்திருக்கும் படம் “ ஸ்கிப் டிரேஸ்” (SKIP TRACE). முதல் நாள் வசூல் மட்டும் 420 கோடி. அதுவும் சீனாவில் மட்டும் தான் பாஸ். பக்கா கமர்ஷியல் படமாக உருவாகியிருக்கிறது ஸ்கிப் டிரேஸ். தமிழில் இரு கில்லாடிகள் என்ற பெயரில் வரும் செப்டம்பர் 2ம் தேதி ரிலீஸ். ரஜினியின் கபாலி படத்தை சீனாவில் வெளியான அன்றே முதல் நாள் முதல் காட்சி பார்த்தாராம் ஜாக்கிசான். அதுபோல தன் படத்தை ரஜினி பார்ப்பாரா என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறாராம் ஜாக்கி. #Thalaivar


கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர் நடிக்கும் அரசியல் த்ரில்லர் படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியிருக்கிறது. முதல் கட்ட படப்பிடிப்பு ஜூலை, ஆகஸ்டுகளில் நடந்தது. இடையே றெக்க படத்திற்கான ஷூட்டிங்கிலும், தர்மதுரை புரமோஷன்களிலும் பிஸியாக இருந்தார் விஜய்சேதுபதி. தற்பொழுது கே.வி.ஆனந்தின் படத்தில் முழுமையாக இறங்கிவிட்டாராம் விஜய்சேதுபதி. இந்த வருட இறுதிக்குள் படம் ரெடியாகிவிடும். #Ko-Again?


 ஐஸ்வர்யா தனுஷ், பெண்கள் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக, இந்தியாவின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பெண்களுக்கான சம உரிமை மற்றும் அவர்களின் முன்னேற்றம் பற்றிய விழிப்புணர்வை இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு எடுத்துக் கூறவிருக்கிறார். ஆண், பெண் இருபாலருக்கும் சமமான உலகை 2030க்குள் உருவாக்குவது தான் இதன் நோக்கமாகும். இந்த திட்டத்திற்கு "Planet 50 - 50 " என பெயர் சூட்டப்பட்டுள்ளது. வாழ்த்துகள் ஐஸ்வர்யா! #WishAish!


சிங்கம் மூன்றாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தற்பொழுது நடந்துவருகிறது. இந்நிலையில் சிங்கம் படத்திற்கான இந்தி டப்பிங் வெளியீடு மற்றும் சாட்டிலைட் உரிமை மொத்தமாக 8கோடிக்கு விற்பனையாகியிருக்கிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் சிங்கம் வெளியாகிறது. மலேசியாவில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பிற்குச் செல்ல தாமதமாகும் என்று சொல்லப்படுகிறது. ஹரி படம்னாலே ஃபாஸ்ட்தானே பாஸு. ஷுட்டிங் மட்டும் ஏன் ஸ்லோவாகுது? #SpeedSpeedSpeed


ஆனந்தசங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் நடிப்பில் உருவாகிவரும் படம் இருமுகன்.  ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை. இப்படத்திற்கான இசை மற்றும் டிரெய்லர் செம ஹிட். இப்படம் சென்சார் சென்று எந்த வித கட்டுமின்றி யு/ஏ சான்றிதழ் பெற்றிருக்கிறது. எனவே படம் செப்டம்பர் 8ம் தேதி வெளியிடுவது உறுதியாகியிருக்கிறது. #WowVikram


தேனாண்டாள் பிலிம்ஸின் தயாரிப்பில் 100வது படத்தை இயக்கும் பொறுப்பில் இருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி. மெகா பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்காக பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சுந்தர்.சி இயக்கும் இப்படத்திற்கு நாயகனாக ஜெயம்ரவி ஒப்பந்தமாகியிருப்பதாக சொல்லப்படுகிறது.  இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பை தொடங்கி ஒர் ஆண்டு ஷூட்டிங் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அளவில் அதிக பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் படம் இது. #MegaBudget 


சிம்புவின் “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்”, படப்பிடிப்பு தற்பொழுது நடந்துவருகிறது. ஆதிக் ரவிச்சந்தரன் இயக்கிவருகிறார். இப்படத்தை 2017 பொங்கல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். சிம்பு மூன்று வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் நாயகியாக ஸ்ரேயா மட்டுமே உறுதியாகியிருக்கிறார். யுவன் இசையமைத்துவருகிறார்.  தவிர, சிம்புவின் “அச்சம் என்பது மடமையடா” செப்டம்பர் 30 ரிலீஸாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. #AAA

-பி.எஸ்-

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்