வெளியிடப்பட்ட நேரம்: 19:46 (30/08/2016)

கடைசி தொடர்பு:19:53 (30/08/2016)

அருண்விஜய் ஒன்றும் பெரிய குற்றமெல்லாம் செய்யவில்லை : விஜயகுமார்

பரங்கிமலையில் உள்ள போக்குவரத்து துணை ஆணையர்  அலுவலகத்தில் இன்று மதியம்  ஆஜரான அருண்விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்டது.  அதன்பின்  போக்குவரத்து போலீஸார் எழும்பூர்  13-வது நீதி மன்றத்துக்கு   அருண் விஜய்யை அழைத்துச் சென்றனர். அங்கே  336, 279, ஐபிசி 185 என்று கோட்டார் வாகனச் சட்டப்படி வேகமாக ஓட்டுதல், கவனக்குறைவாக ஓட்டுதல் என  அருண்மீது மூன்று பிரிவுகளின் கீழ்  வழக்கு பதிவு செய்யப்பட்டு அவருக்கு  ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த வழக்கில், நடிகர் அருண் விஜய் பரங்கிமலையில் உள்ள, போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்தில் இன்று மதியம் ஆஜரானார்.பிறகு,அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பிறகு அவர் கைது செய்யப்பட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

என்னதான்  நடந்தது என்பது குறித்து நடிகரும், அருண்விஜய்யின் தந்தையுமான விஜயகுமாரிடம் கேட்டோம். 

 

                               ''  என் மகன் அருண்விஜய்  கடந்த   25-ம் தேதி இரவு  ஒரு விருந்துக்கு சென்றுவிட்டு நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையம் வழியாக ஆடி காரில் வந்துகொண்டு இருந்தார். அப்போது காரை இயக்கும்போது  சிறிய கவனக்குறைவால் எதிரில் இருந்த போலீஸார் வாகனத்தில் மேல் மோதிவிட்டது அதனால் காரில்  லேசான உரசல் ஏற்பட்டது. போலீஸ் வாகனத்தில் ஏற்பட்ட சேதத்தை சரிபார்த்து தருமாறு போலீஸார் கேட்டுக் கொண்டனர். நாங்களும் பழுது பார்த்து தருவதாக ஒரு வெள்ளைத்தாளில் எழுதிக் கொடுத்தோம். அதன்பின் அவர்களாகத்தான் அருண்விஜய்யை போகச் சொன்னார்கள். 

                            திடீரென காவல் நிலையத்தைவிட்டு அருண்விஜய் ஓடிவிட்டதாக யாரோ செய்தியை பரப்பி விட்டனர். ஏதோ பெரிய குற்றத்தை அருண்விஜய் செய்து விட்டதுபோல் சிலர் ஒரு  பூதாகர தோற்றத்தை உருவாக்கி விட்டனர். இன்று நீதிமன்றத்தில் ஆஜரானோம்  அருண்விஜய்க்கு ஜாமின் வழங்கப்பட்டது. இனிமேல்  எங்களைப்பற்றி  ஏதாவது தவறான செய்தி  பரப்பபட்டால் எங்களுக்கு போன் செய்து உண்மையை தெளிவுபடுத்த்க் கொள்ளுங்கள் என்று  கேட்டுக் கொள்கிறேன் '' என்று விளக்கம் சொன்னார்


-சத்யாபதி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்