Published:Updated:

விஜய் ஆங்ரி... சினேகா ரீ என்ட்ரி! #quickseven #க்வின்-செவன்

Vikatan
விஜய் ஆங்ரி... சினேகா ரீ என்ட்ரி! #quickseven #க்வின்-செவன்
விஜய் ஆங்ரி... சினேகா ரீ என்ட்ரி! #quickseven #க்வின்-செவன்
விஜய் ஆங்ரி... சினேகா ரீ என்ட்ரி! #quickseven #க்வின்-செவன்

விஜய் ஆவேசம்...

இதுவரை  'விஜய்- 60' படத்தின்  படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்தது. அடுத்து சென்னையில் பிவிபி ஸ்டுடியோவின் பிரம்மாண்ட செட்டில் ஷூட்டிங் நடத்தப் பட்டது. அங்கே நடத்த படப்பிடிப்பில் எல்லாம் கூலாக நடித்துக் கொடுத்தார் விஜய். சமீபத்தில் பொள்ளாச்சி பகுதியில் பொதுஇடத்தில் ஷூட்டிங் நடந்தது.  விஜய் படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது என்பதை அறிந்த அக்கம், பக்கத்து ஊர்காரர்கள் கார்கள் எடுத்துக் கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டை முற்றுகை இட்டனர். அந்த இடத்தைச் சுற்றிலும் இருந்த  ஆயிரக்கணக்கானக்கானோர் சூழ்ந்து இருந்தனர். கேரவன் வேனில் இருந்து இறங்கி படப்பிடிப்புக்கு வந்த விஜய் மக்கள் கூடத்தைப் பார்த்து அதிர்ச்சியானார்.  விஜய்யைப் பார்த்த மக்கள் மத்தியில் நெருக்கடி ஏற்பட்டு திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. டைரக்டர் பரதனை அழைத்த விஜய் 'இனிமே பொதுஇடத்தில் ஷூட்டிங் நடத்தினால் நான் வரமாட்டேன்' என்று ஆவேசமாக சொல்லிவிட்டு விருட்டென வெளியேறினார்.

வில்லன் அரவிந்த்சாமி... 

வினோத் இயக்கத்தில் நட்ராஜ் நடிக்க வெளியாகி ஹிட் அடித்தப் படம் “சதுரங்க வேட்டை”. இப்படத்தை மனோபாலா தயாரித்தார். இப்படம் விமர்சகர்கள் மத்தியிலும், வசூல் ரீதியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு கிடைத்த பாராட்டுகளுக்குப் பிறகு, சதுரங்கவேட்டை 2ம் பாகத்திற்கான வேலைகளை தொடங்கினார் இயக்குநர். படத்திற்கான தயாரிப்பு தாமதமானது. இறுதியில் இரண்டாம் பாகத்தில் கார்த்தி நடிப்பது உறுதியானது. வில்லனாக நடிக்க, அரவிந்த் சாமியிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. தயாரிப்பாளர் மனோபாலா அரவிந்த் சாமியை அணுகி கதையைச் சொல்லியிருக்கிறாராம். விரைவில் அரவிந்த் சாமி, இப்படத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று சொல்லப்படுகிறது. 

வரலட்சுமி கோபம்...

சரத்குமார், ராதிகா மகள் ரேயான் திருமணத்துக்கு தன்மகள் வரலட்சுமிக்கு மட்டும் திருமண அழைப்பு அனுப்பினார், சரத்குமார். மகாபலிரத்தில் நடந்த திருமணத்துக்கு மகள் வருவார் என்று ஆவலோடு காத்திருந்த சரத் வரலட்சுமியை அழைத்து வருவதற்கான பொறுப்பை ஒரு நண்பரிடம் ஒப்படைத்து இருந்தார்.  சரத் அனுப்பிய நண்பர் வரலட்சுமியை பார்க்கச் சென்று இருக்கிறார். ' தேர்தல் போட்டி என்பது அன்றோடு முடிந்து விட்டது இன்னும் விரோதம் பார்ப்பது ஏன்? இப்போது விஷால் நடிகர் சங்கத்தோட பொதுச்செயலாளர் பதவியில் இருக்கிறார். அவருக்கு ஏன் இன்விடேஷன் தரவில்லை. விஷாலுக்கு அழைப்பு இல்லாத திருமணத்தில் நிச்சயமாக நான் கலந்துகொள்ள மாட்டேன்' என்று அவரிடம் சொல்லுங்கள் என்று கோபமாக கடுகடுத்து அனுப்பி விட்டாராம் வரலட்சுமி.

மீண்டும் சினேகா.... 

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தை 24AM ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் பகத்பாசில், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் மற்றும் தம்பிராமையா நடிக்கவிருப்பது ஏற்கெனவே உறுதியாகியிருக்கிறது. இந்நிலையில் கூடுதலாக, முக்கிய கதாப்பாத்திரத்தில் சினேகா நடிக்கவிருக்கிறார். செப்டம்பர் மாதத்தில் படப்பிடிப்பை தொடங்குகிறது படக்குழு.

அதர்வாவுடன் நயன்தாரா....

விஜய் ஆங்ரி... சினேகா ரீ என்ட்ரி! #quickseven #க்வின்-செவன்

டிமான்டி காலணி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக இயக்கவிருக்கும் படம் “இமைக்கா நொடிகள்”. அதர்வா நடிக்கவிருக்கும் இப்படத்தில் நயன்தாரா ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தை கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, செல்வகுமர் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். இந்தப் படத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதர்வாவிற்கு ஜோடியாக வேறு ஒர் நடிகையை ஒப்பந்தம் செய்யவிருக்கிறது படக்குழு. 

மழையும் போரும்... 

பாகுபலி இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த வருட இறுதிக்குள் படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிடும் நம்பிக்கையில் இருக்கிறார் இயக்குநர் ராஜமெளலி. அப்படத்திற்கான க்ளைமேக்ஸ் போர் காட்சிகளை தற்பொழுது ராஜமெளலி படமாக்கிவருகிறார். தற்பொழுது படப்பிடிப்பின் போது, மழையின் காரணமாக படப்பிடிப்பின் வேகம் நிறுத்தப்பட்டது.  ஆனால் அந்த நேரத்தில் நடிகர்கள் கிரிக்கெட் விளையாடும் காட்சிகளை வீடியோவாக இணையத்தில் வெளியிட்டு வைரலடித்தார் ராஜமெளலி. மறுபடியும் நினைவுபடுத்துகிறோம், பாகுபலி 2017 ஏபரல் 14ல் ரிலீஸ்! 

பிரசன்னா வேஷம்...

முதன்முதலாக பிரசன்னாவை ஹீரோவாக 'பைவ் ஸ்டார்' படத்தில் அறிமுகம் செய்தவர், சுசி கணேசன்.  இப்போது பத்து ஆண்டுகளுக்கு பிறகு  'திருட்டு பயலே' இரண்டாம் பாகத்தை இயக்கும் சுசிகணேசன் அந்த படத்தில் பிரசன்னாவை வில்லன் வேஷத்தில் நடிக்க வைக்கிறார். ஹீரோவாக நடித்த பிரசன்னாவை  மிஷ்கின் தனது 'அஞ்சாதே'   படத்தில் மகா கொடுமையான  வில்லனாக்கினார். இப்போது அதே மிஷ்கின் 'துப்பறிவாளன்' படத்தில் விஷாலுக்கு நண்பனாக ரொம்ப நல்லவன் வேஷத்தில் நடிக்க வைக்கப் போகிறார். திருமணமாகி குழந்தை பெற்றுக் கொண்ட  பிரசன்னா, சிநேகா தம்பதி அவ்வப்போது விளம்பர படத்தில் தலைகாட்டி வந்தனர். இப்போது மலையாள படத்தின் மனைவியும், தமிழ் படங்களில் கணவனும் பிஸி.

- சத்யாபதி - பி.எஸ்

Vikatan