தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட தயாராகிறார் ஜே.கே. ரித்தீஷ்!
நடிகர் சங்கத்தில் ஊழல் நடந்து உள்ளது என்று கூறி விஷால் தலைமையிலான அணியினர் போர்க்கொடி தூக்கினர். இதற்கு பின் புலமாக இருந்து விஷாலை ஜெயிக்க வைத்ததில் ஜே.கே. ரித்தீஷின் பங்கு அதிகம். அதற்குப் பிறகு நடிகர் சங்கத்தின் கூட்டங்களில் ஜே.கே. ரித்தீஷூக்கு அதிக முக்கியத்துவம் தரப்படாமல் இருந்தது.
இது தொடர்பாக இருவருக்கும் பனிப் போர் நிலவி வந்தது. இதன் தொடச்சியாகவே வராகி பிரச்சனையும் பார்க்கப்படுகிறது இதைத் தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், ‘சிலரின் தூண்டுதலால் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்படும்’ என்று கூறியிருந்தார்.
நடிகரும் முன்னாள் நடிகர் சங்க பொது செயலாளருமான ராதா ரவியின் பிறந்தநாள் விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அதில் ஜே.கே. ரித்தீஷ், வராகி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போதுதான் ஒரு புதிய முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.. அதாவது வருகிற ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் ஜே.கே. ரித்தீஷ் தலைவர் பதவிக்கு போட்டியிட வைப்பது என்றும் அதற்கு ராதாரவி உதவி செய்வது என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.. அந்த சமயத்தில் நடிகரும், நடிகர் சங்கத்தின் பொது செயளாலருமான விஷால் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் இளைஞர்கள் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இவரின் இந்த செயலை முறியடிக்க நடிகர் சங்கத்தின் மீது வராகி மூலம் வைத்து புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது...
-பிரம்மா