அட.. அஜித் பெயர்தான் விஜய்60 டைட்டிலா!? #Vijay60Title | Vijay60 movie name revealed #Vijay60Title

வெளியிடப்பட்ட நேரம்: 15:29 (03/09/2016)

கடைசி தொடர்பு:18:22 (03/09/2016)

அட.. அஜித் பெயர்தான் விஜய்60 டைட்டிலா!? #Vijay60Title

கடந்த ஆண்டு விநாயக சதுர்த்தி நாளில் ரஜினியின் 'கபாலி'  ஃபர்ஸ்ட் லுக், போஸ்டர் வெளியிடப்பட்டது. பூஜை, படப்பிடிப்பு சென்னை ரஷ்யன் கல்சுரல் அகடாமியில் நடந்தது. விஜய்யின் 60-வது  படத்துக்கு 'தளபதி-60',  'விஜய்-60' என்று பெயர்கள் சூட்டி செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது. பரதன் இயக்கத்தில் விஜய்யின் 60-வது படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்து விட்டது.

விஜய் படத்துக்கான டைட்டில் என்ன என்று சகட்டுமேனிக்கு ஹேஷ்யங்கள் உலவியது. தற்போது படத்தை தயாரித்துவரும் தயாரிப்பாளர் வெங்கட்ரமண ரெட்டி 'எங்க வீட்டு பிள்ளை' படத்தை தயாரித்த நாகிரெட்டியின் வாரிசு எனவே எம்.ஜி.ஆர்பட தலைப்பை வைப்பார்கள் என்று பேசப்பட்டது. 

நாகிரெட்டியார் குடும்பத்தினருக்கு விநாயகர் மேல் பக்தி அதிகம்.  தங்கள் கம்பெனியில் துவங்கும் ஒவ்வொரு புராஜெக்ட்டையும் சென்ட்டிமென்ட்டாக விநாயக சதுர்த்தி அன்று ஆரம்பிப்பது வழக்கம். அதுபோலவே  தங்கள் பேனரில் விஜய் நடித்துவரும் அவரது 60-வது படத்தின் டைட்டிலை சென்டிமென்ட்டாக  விநாயக சதுர்த்தி அன்று அறிவித்தால் அதிர்ஷ்டகரமாக இருக்கும் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல விநாயகரை இஷ்ட தெய்வமாக வணங்கும் நாகிரெட்டியார் அன்புக்கு இணங்க விஜய்யின்  60-வது பட டைட்டில், போஸ்டர், ஃபர்ஸ்ட் லூக் எல்லாமே வருகிற விநாயக சதுர்த்தி அன்று வெளியாகும்.

அதுசரி... விஜய்யின் 60-வதுபட டைட்டில் என்ன தெரியுமா...? இந்நேரம் நீங்கள் சரியாகக் கணித்திருக்க வேண்டும்... ஆம்...'விநாயகம்'!  வீரம் படத்தில் வரும் அஜித்தின் பெயர் விநாயகம்... அஜித் பெயர்தான் விஜய்-60 டைட்டிலாகியுள்ளது. 

-சத்யாபதி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்