வெளியிடப்பட்ட நேரம்: 20:23 (06/09/2016)

கடைசி தொடர்பு:10:20 (07/09/2016)

அஜித்தின் ‘நோ’ சூர்யாவின் ‘எஸ்’. ஹிட் ராசி தொடருமா?

'அஜித் கால்ஷீட் கிடைச்சா கேரியர் பெஸ்ட்டா ஒரு படம் பண்ணிரலாம்!’ என்று நயன்தாராவிடம் சொல்லியிருக்கிறார் விக்னேஷ் சிவன். அது அன்பு வேண்டுகோளும் கூட. விக்னேஷுக்கான அஜித் புராஜெக்ட்டை கையில் எடுத்தார் நயன்தாரா.

ஆனால், கால்ஷீட் விவகாரத்தில் யார் தலையீடு செய்தாலும் அஜித்துக்குப் பிடிக்காது என்ற விஷயம் நயன்தாராவுக்குத் தெரியவில்லை போல. நயன்  அனுப்பி வைத்த ஆட்கள் எல்லாம் சுவற்றில் எறிந்த பந்தாக திரும்பிவர, இறுதியாக தானே களத்தில் இறங்கினார். தற்போது வாங்கும் சம்பளத்தை அதிகம் தருவதாகச் சொன்ன முயற்சியும் கைகூடவில்லை. தொடர் முயற்சிகளுக்குப் பின் ஒருவழியாக நயன்தாராவிடம் பேசிய அஜித், ’இயக்குனர் யார்?’ என்று கேட்டாராம். விக்னேஷ் பெயரைச் சொன்னதும் அமைதியானார் அஜித்.

பின்னர், 'நான் அறிமுகம் செய்த  எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ் எல்லாமே இப்போது பிரபல இயக்குநர்கள். என் கால்ஷீட் கேட்கும் அவர்களுக்கே நான் தரவில்லை. நீங்கள் சொல்பவர்  இயக்கத்தில் நான் நடிப்பது முடியாது!’ என்று நாசுக்காக மறுத்துவிட்டார் அஜித்.

இன்னொரு பக்கம் விசாரித்தபோது, 'அஜித் பட ஷூட்டிங் ஆரம்பித்து விட்டால் அவரைப்பற்றி பேச்சு இருக்காது. முழுக்க முழுக்க தாரா, விக்னேஷ் காதல் விவகாரத்தை மட்டுமே மீடியாக்கள் பெரிதுபடுத்தி பேசும். அதை அஜித் விரும்பமாட்டார்’ என்றும் சொல்கிறார்கள்.

அஜித் கால்ஷீட் இல்லையென்றதும் விக்னேஷ் சிவன் கலங்கிவிட்டார். ஆனால், மனம் தளராத நயன்தாரா சூர்யாவிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார். 'நான் ஏற்கனவே முத்தையா படத்தில் நடிப்பதாக இருக்கிறேனே!” என்று சூர்யா சொல்ல, 'எனக்காக, நீங்கள் மறுக்காமல் ஒப்புக் கொள்ள வேண்டும்' என்று சொல்லி விக்னேஷை கதை சொல்ல சூர்யாவிடம்  அனுப்பியிருக்கிறார்.கதை பிடித்துப்போய் சூர்யாவும் ஓக்கே சொல்லிவிட்டார். இதை ட்விட்டரில் உறுதிப்படுத்தி இருக்கிறார் விக்னேஷ் சிவன். சூர்யா படத்திற்காக முதல் முறையாக இசை அமைக்க இருக்கிறார் அனிருத். 

கஜினி, காக்க காக்க ஆகிய படங்கள் அஜித் ’நோ’ சொல்லித்தான் சூர்யாவுக்கு வந்தது.ஆனால், சூர்யாவின் கேரியர் கிராஃபில் பெரிய இடத்தை இந்தப் படங்கள் பெற்றது. அதே வரிசையில் விக்னேஷ் சிவனின் படமும் அமையுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் . 


- சத்யாபதி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்