‘ஹிஸ்டாரிக்கல் படம் வேண்டாம்!’ - மீண்டும் அட்லி இயக்கத்தில் விஜய்

 

 

மறைந்த தயாரிப்பாளரும், இயக்குனருமான ராம நாராயணன் மகன் முரளி ஏகப்பட்ட புதுப்படங்களை தயாரித்து வருகிறார். தற்போது 'பாகுபலி' படம் போல் வரலாற்றுப்  படத்தை தயாரிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்.  சுந்தர். சி இயக்கத்தில்  200 கோடி செலவில் உருவாகும் படத்துக்கு 'சங்கமித்ரா' என்று பெயர் சூட்டி இருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கும்படி  நடிகர் விஜய்யை சந்தித்து கேட்டனர். 


                               'நான் ஏற்கெனவே நடிச்ச 'புலி'படம்கூட வரலாற்று ஃபேன்டசி படம்தான் . ஆனால், அது எதிர்பார்த்த அளவுக்கு சரியா போகலை. எனக்கு அதுமாதிரி கேரக்டர் செட்டாகலை' என்று மறுத்தவர் தொடர்ந்து 'உங்க பேனர்ல வேறொரு படத்துக்கு கண்டிப்பா கால்ஷீட் தரேன். சீக்கிரமாக டைரக்டர் யார்னு சொல்றேன்" என்று முரளியை வழியனுப்பி வைத்தார், விஜய். தற்போது அந்தப் படத்தில் நடிக்க ஜெயம் ரவியிடமும், மகேஷ் பாபுவிடமும் பேசப்பட்டு வருகிறது.


                          ஏற்கெனவே 'பைரவா' படத்துக்கு பிறகு  சிவாஜி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு தனது கால்ஷிட்டை கொடுத்து இருந்தார், விஜய். பொதுவாக  சிவாஜி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ரஜினியோ, கமலோ கால்ஷீட் கொடுத்தால் தாங்கள்  வழக்கமாக வாங்கும் சம்பளத்தைவிட கணிசமான அளவு குறைத்துக் கொள்வார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. விஜய் சம்பள விஷயத்திலும் அதையே எதிர்பார்த்தது சிவாஜி பிலிம்ஸ் இழுபறி நீடித்ததால் இப்போது முரளியின் தேனாண்டள் பிலிம்ஸுக்கு விஜய் கால்ஷீட்  கொடுத்து இருப்பதாக சொல்கிறார்கள்.


                         விஜய் - அட்லி கூட்டணியில் உருவான 'தெறி'யின் கதை  பழைய விஜயகாந்த் படங்களை நினைவூட்டினாலும் மேக்கிங் பெரிதாக பேசப்பட்டது. இப்போது ராம நாராயணன் வாரிசு முரளி தயாரிக்கும் படத்துக்கு கால்ஷீட் கொடுத்த விஜய் இயக்குனராக அட்லியை சிபாரிசு செய்து இருக்கிறார்.  முரளி உடனடியாக  விஜய் நடிக்கும் படத்தின் ஒன்லைன் கதையை  அட்லியிடம் கேட்டுவிட்டு அவருக்கும் அட்வான்ஸ் தொகை கொடுத்து விட்டார், முரளி.


- சத்யாபதி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!